பெங்களூர் அணி கோப்பையை வெல்லாததற்கு நாங்களே காரணம்: ஓப்பனாக ஓப்புக்கொண்ட வெளிநாட்டு வீரர் 1

போட்டியில் வெற்றி பெறுவதற்கு ஆர்சிபி விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோரை மட்டுமே நம்பி இருக்க முடியாது என மொயீன் அலி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 12 வீரர்களை அதிரடியாக வெளியேற்றியுள்ளது. அதில் ஸ்டெயின், சவுத்தி, கவுல்டர்-நைல் ஆகிய முக்கிய பந்து வீச்சாளர்களாவார்கள். இவர்களுடன் மார்கஸ் ஸ்டாய்னிஸ், கொலின் டி கிராண்ட்ஹோம் ஆகியோரையும் வெளியேற்றியுள்ளது.

விராட் கோலி, டி வில்லியர்ஸ் ஆகிய இருவர்கள்தான் பேட்டிங்கில் ஆர்சிபி அணியின் முதுகெலும்பாக உள்ளனர். மூன்று முறை ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு நுழைந்த போதிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை.

பெங்களூர் அணி கோப்பையை வெல்லாததற்கு நாங்களே காரணம்: ஓப்பனாக ஓப்புக்கொண்ட வெளிநாட்டு வீரர் 2
Moeen Ali believes that Royal Challengers Bangalore (RCB) cannot expect Virat Kohli and AB de Villiers to win games for them and so other players need to step up.

இந்நிலையில் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளரான மொயீன் அலி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமென்றால், விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோரை மட்டுமே சார்ந்து இருக்க முடியாது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மொயீன் அலி கூறுகையில் ‘‘எங்களுக்கு நல்ல தொடக்கம் தேவை. நாங்கள் எப்போதுமே தொடரை மெதுவாக தொடங்குகிறோம் என்று நினைக்கிறேன். சொந்த மைதானத்தில் விளையாடும்போது எங்களுக்கு தைரியம் தேவை. பெங்களூர் ஆடுகளம் மிகவும் சிறந்தது. பவுண்டரி லைன் மிகச் சிறியது. இது பந்து வீச்சாளர்களுக்கு கடினமாக இருக்கும்.

பெங்களூர் அணி கோப்பையை வெல்லாததற்கு நாங்களே காரணம்: ஓப்பனாக ஓப்புக்கொண்ட வெளிநாட்டு வீரர் 3
Royal Challengers Bangalore players celebrates the wicket of Rohit Sharma captain of Mumbai Indians during match 31 of the Vivo Indian Premier League Season 12, 2019 between the Mumbai Indians and the Royal Challengers Bangalore held at the Wankhede Stadium in Mumbai on the 15th April 2019
Photo by: Vipin Pawar /SPORTZPICS for BCCI

எங்கள் அணியின் வெற்றிக்கு விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரை மட்டுமே சார்ந்து இருக்க முடியாது. பேட்டிங்கில் என்னைப் போன்ற வீரர்கள், சிறப்பாக பேட்டிங் செய்து அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும்’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *