ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 20-ம் தேதி துவங்கப்பட்டு அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
பிசிசிஐ திட்டமிட்டபடி ஐபிஎல் தொடர் மீண்டும் நடைபெறுவது உறுதி ஆகியுள்ள நிலையில், பிசிசிஐ மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு குறித்த தேதிகளில் ஒரு சில வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் பங்குபெற முடியாது என்கிற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அதனடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்குபெற போகாத 4 வீரர்களைப் பற்றி பார்ப்போம்.
சாம் கரன்
இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் அவர்களது சர்வதேச தொடர்களில் பிஸியாக இருக்கப் போவதால் இவர் நிச்சயமாக ஐபிஎல் தொடரில் பங்கெடுக்க மாட்டார் என தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு சென்னை அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி மிக சிறப்பாக 9 விக்கெட்டுகளை கைப்பற்றி கொடுத்தார். அதேசமயம் பேட்டிங்கில் 58 ரன்கள் இறுதி ஓவர்களில் 208 ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் அடித்து கொடுத்தார். 2020ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக நிறைய போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடி வரும் ஆல்ரவுண்டர் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாது என்கிற செய்தி சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தை நிச்சயமாக கவலைகொள்ள வைத்திருக்கும்.