ரீ எண்ட்ரீ கொடுக்கும் அதிரடி பேட்ஸ்மேன்… சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிராக தைரியமாக பேட்டிங்கை தேர்வு செய்தார் ரிஷப் பண்ட்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
17வது ஐபிஎல் தொடரின் 13வது போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.
விசாகப்பட்டிணம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான போட்டிக்கான டெல்லி அணியின் ஆடும் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குல்தீபிற்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேனான ப்ரித்வி ஷா மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல் ரிக்கி புய்க்கு பதிலாக சீனியர் வீரரான இஷாந்த் சர்மா ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதே வேளையில் கடந்த இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது ஆடும் லெவனில் எவ்வித மாற்றமும் செய்யாமல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆடும் லெவன்;
ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஸ், ரிஷப் பண்ட், த்ரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிசேக் பரல், அக்ஷர் பட்டேல், அன்ரிச் நோர்கியா, முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அஹமத்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆடும் லெவன்;
ருத்துராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, ரஹானே, டேரியல் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, தோனி, தீபக் சாஹர், துசார் தேஸ்பாண்டே, மதீஷா பதிரானா, முஸ்தபிசுர் ரஹ்மான்