சென்னை அணியின் புதிய கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள மூன்று வெளிநாட்டு வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
2022 ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்து ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன் பதவியை ஒப்படைத்தார். ஆனால் ஜடேஜாவின் கேப்டன்ஷிப் சென்னை அணிக்கு ஒத்துவரவில்லை, இவருடைய தலைமையின் கீழ் சென்னை அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இதன் காரணமாக மீண்டும் கேப்டன் பதவியை தோனியே ஏற்றுக்கொண்டார்.
ஆனால் தோனி சென்னை அணியின் நிரந்தர கேப்டனாக இருக்க முடியாது என்பதால் சென்னையை அடுத்து வழிநடத்தும் வீரரை சென்னை அணி நிர்வாகம் தேடிக்கொண்டு உள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடரோடு தோனி ஓய்வு அறிவிப்பார் என்பதால் அதற்குப்பின் சென்னை அணியை வழிநடத்த கூடிய வீரர் யாராக இருப்பார்கள் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்த மூன்று வெளிநாட்டு வீரர்களில் ஒருவரை சென்னை அணியின் கேப்டனாக நியமித்தால் நன்றாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
அப்படிப்பட்ட 3 வீரர்கள் குறித்தும் காண்போம்..