ஐபில் ஏலம்: ரூ. 30 லட்சத்திற்கு ஏலம்போன பில்லியனர் மகன் 1
ஐபிஎல் வீரர்கள் எலம் நேற்றும், நேற்றுமுன்தினமும் (ஜனவரி 27-ந்தேதி மற்றும் 28-ந்தேதி) நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸை 12.5 கோடி ரூபாய்க்கும், இந்தியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜெய்தேவ் உனத்கட்டை 11.5 கோடி ரூபாய் கொடுத்தும் வாங்கியது.ஐபில் ஏலம்: ரூ. 30 லட்சத்திற்கு ஏலம்போன பில்லியனர் மகன்
ஐபிஎல் ஏலத்தில் இந்த இரண்டு தொகைதான் அதிகபட்ச தொகைதான். இதே அணி ஆர்யமன் பிர்லாவை ரூ. 30 லட்சம் கொடுத்து வாங்கியது. 20 வயதே ஆன பேட்ஸ்மேன் ஆர்யமன் பிர்லா யார் என்பதை அறிய யாரும் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.

தற்போது ஆர்யமன் பிர்லா யார் என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபர் குழுமம் ஆன ஆதித்யா பிர்லா குரூப்பின் குமார் மங்கலம் பிர்லாவின் மகன் ஆவார். குமார் மங்கலத்தின் மொத்த சொத்து மதிப்பு 12.7 பில்லியன் டாலராகும்.

ஐபில் ஏலம்: ரூ. 30 லட்சத்திற்கு ஏலம்போன பில்லியனர் மகன் 2

ஆர்யமன் பிர்லா மத்திய பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார். ஒரேயொரு ரஞ்சி டிராபி போட்டியில் மட்டுமே விளையாடியிருந்தாலும், அவரது திறமையினால் ஐபிஎல் அணியில் தேர்வாகியுள்ளார். சிகே நாயுடு டிராபியில் 11 இன்னிங்சில் 795 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 79.5 ஆகும்.

ராஜஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள ஆர்யமன் பிர்லா கூறுகையில் ‘‘என்னுடைய கிரிக்கெட் திறமையை கற்பதற்கான சிறந்த அடித்தளமாக இது இருக்கும். ஒரு இளம் வீரராக இது மிகப்பெரிய வாய்ப்பு. மிகப்பெரிய கிரிக்கெட் வீரர்களுடன் இணைய இருப்பது உண்மையிலேயே மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது.

மூன்று வருடத்திற்கு முன்பு நான் மும்பையில் இருந்து மத்திய பிரதேச அணிக்கு மாறிவிட்டேன். மும்பைக்காக விளையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மத்திய பிரதேசத்தில் உள்ள ரெவா மாவட்டத்திற்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் அணியில் இடம்பெறுவது எளிதான காரியம் அல்ல. அந்த இடத்தை பிடிப்பதற்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலை இருந்தது. அதை திறம்பட செய்ததற்காக நாம் பெருமையடைகிறேன்.

ஐபில் ஏலம்: ரூ. 30 லட்சத்திற்கு ஏலம்போன பில்லியனர் மகன் 3

என்னுடைய பெற்றோர் (குமார் மங்கலம் – நீர்ஜா பிர்லா) மிகவும் சந்தோசம் அடைந்தனர். ஏலத்தின் என்னை எடுக்கும்போது நான் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தேன். ஏலம் முடிந்த பின்னரே ராஜஸ்தான் அணி என்னை வாங்கிய செய்தியை அறிந்தேன். என்னுடைய ஒட்டுமொத்த குடும்பமும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.

இதேபோல் முன்னாள் அதிரடி வீரரான சேவாக்கின் மருமகன் மயாங்க் தாதரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இவர் 13 டி20 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். சேவாக் பஞ்சாப் அணியின் ஆலோசகராக உள்ளார். ஏலத்தின்போது அவர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *