ப்ளே-ஆப் சுற்றுக்கள் நெருங்கும் வேலையில் ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியல்! 1

ஐபிஎல் லீக் போட்டிகள் கடைசி கட்டத்தை நெருங்கும் நிலையில் ப்ளே ஆஃப் சுற்றில் எந்தெந்த அணிகள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2019ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஒரு அணிக்கு 14 போட்டிகள் என்ற கணக்கில் மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் 2 போட்டிகளில் மோதும்.

இறுதியாக புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். ஒரு அணி தாங்கள் விளையாடும் 14 போட்டிகளில் 8 போட்டிகளை வென்றால், ப்ளே ஆஃபிற்கு தகுதி பெற்றுவிடும். அதையும் மீறி 9 அல்லது 10 போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும்.ப்ளே-ஆப் சுற்றுக்கள் நெருங்கும் வேலையில் ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியல்! 2

இதேபோன்று சில அணிகள் 7 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளும் 7 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் பட்சத்தில் ரன் ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் இடம் பெற வாய்ப்பு உள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இதுவரை 45 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், இன்று 46 மற்றும் 47வது போட்டிகள் நடைபெறுகின்றன.

புள்ளிகள் பட்டியலின் தற்போதைய நிலவரப்படி 12 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 8 போட்டிகளை வென்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. எனவே சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றில் விளையாடும் என்பது உறுதியாகிவிட்டது. அதை தவிர்த்து ப்ளே ஆஃப் சுற்றில் இடம்பெறும் மற்ற மூன்று அணிகள் எவை என்பதை, இருக்கும் நடைமுறை சாத்தியங்களை வைத்து கணிக்க முடியும்.

ப்ளே-ஆப் சுற்றுக்கள் நெருங்கும் வேலையில் ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியல்! 3
Photo by: Faheem Hussain /SPORTZPICS for BCCI

சென்னை அணிக்கு அடுத்த படியாக புள்ளிகள் பட்டியளில் இருக்கும் அணிகள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ். இரு அணிகளும் தலா 11 போட்டிகளில் 7 போட்டிகளை வென்று 14 புள்ளிகளுடன் இருக்கின்றன. இந்த இரு அணிகளும் மீதமுள்ள 3 போட்டிகளில் ஒரு போட்டியில் வென்றாலும் ப்ளே ஆஃப் சுற்றில் இடம்பிடிப்பதை உறுதி செய்துவிடும். இதில் டெல்லி அணி இன்று பெங்களூர் அணியுடன் மோதுகிறது. அத்துடன் மே ஒன்றாம் தேதி சென்னை அணியுடனும், மே 4ல் ராஜஸ்தான் அணியுடனும் மோதவுள்ளது. மும்பை அணி இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனும், 2ஆம் தேதி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனும், மே 5ஆம் தேதி மீண்டும் கொல்கத்தா அணியுடனும் மோதவுள்ளது.

 

அணி போட்டி வென்றது லாஸ்ட் டைட் என்.ஆர் புள்ளிகள் நி.ஓ.வீ.
சென்னை 12 8 4 0 0 16 -0,113
மும்பை 11 7 4 0 0 14 +0,537
டெல்லி 11 7 4 0 0 14 +0,181
ஹைதராபாத் 11 5 6 0 0 10 +0,559
பஞ்சாப் 11 5 6 0 0 10 -0,117
ராஜஸ்தான் 12 5 7 0 0 10 -0,321
கொல்கத்தா 11 4 7 0 0 8 -0,050
பெங்களூர் 11 4 7 0 0 8 -0,683

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *