ஜடேஜா சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்படுவதாக வெளிவந்த தகவல்களால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மகேந்திர சிங் தோனி கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பில் இல்லாமல், அதை ஜடேஜாவிடம் ஒப்படைத்தார்.
எட்டு போட்டிகளில் ஆறு தோல்வி மற்றும் இரண்டு வெற்றிகளை பெற்றிருந்த ஜடேஜா தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்ததை அடுத்து மீதம் இருக்கும் போட்டிகளில் மீண்டும் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்று விளையாடினார்.
ஜடேஜா கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திற்கும் அவருக்கும் தனிப்பட்ட முறையில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. அதற்கு வலுசேர்க்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிஎஸ்கே சார்ந்த பதிவுகளை ஜடேஜா நீக்கி இருக்கிறார். மேலும் சிஎஸ்கே அணியை அன்பாலோ செய்திருக்கிறார்.
மேலும் இந்த விரிசலை புரிந்து கொண்டு ஜடேஜாவை வீரர் பரிமாற்ற முறையில் வேறு அணிகள் எடுப்பதற்கு முயற்சித்தன. கிட்டத்தட்ட டெல்லி அணிக்கு எடுக்கப்பட்டுவிட்டார். அவருக்கு பதிலாக வேறு இரண்டு வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் எடுக்க உள்ளது என்கிற தகவல்களும் வந்தன.
ஆனால் இந்த விவகாரத்தில் கேப்டன் தோனி தலையிட்டு ஜடேஜாவிடம் பேசி இருக்கிறார். சிஎஸ்கே அணியில் ஜடேஜாவின் பொறுப்பு எத்தகையது என்பது பற்றியும் அவரிடம் பேசி இருக்கிறார். ஜடேஜாவிற்கு சரியான மாற்று வீரர் எவருமில்லை என்பதையும் புரிய வைத்திருக்கிறார்.
Photo by Deepak Malik/ Sportzpics for IPL
இதனால் அணி நிர்வாகமும் ஜடேஜாவும் ஒருமனதாக சாந்தம் அடைந்திருப்பதாக தகவல்கள் வருகிறது. ஜடேஜா தக்கவைக்கப்படுகிறார் என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளது.
வருகிற நவம்பர் 15 ஆம் தேதியோடு இந்த வீரர்கள் பரிமாற்றம் முடிவடைகிறது. அதற்குள் ஒவ்வொரு அணியும் எந்த அணியுடன் தங்களது வீரர்களை டிரேட் செய்து புதிய வீரரை மாற்றி இருக்கின்றனர் என்ற விவரத்தை ஐபிஎல் நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருக்கிறது.
சிஎஸ்கே அணியில் இரண்டு மாற்றம்
சிஎஸ்கே அணி இரண்டு வீரர்களை இந்த காலகட்டத்தில் வெளியேற்றுவதாக தகவல்கள் வருகிறது. கிரிஷ் ஜோர்டன் மற்றும் ஆடம் மில்நே இருவரின் பெயர் அடிபடுகிறது.