நடுவர்களே கண்துறந்து பாருங்கள் பீல்டிங்கில் கோல்மால் நடக்கிறது: முகமது கைப் 1

ஐபிஎல் தொடரில் பில்டிங்கில் கோல்மால் நடந்து வருகிறது என டெல்லி அணியின் பயிற்சியாளராக முகமது கைஃப் கூறியுள்ளார்.

டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில் ரஸல் பந்து வீசிய பிறகு அவருக்கு ஓய்வு கொடுக்க உடனடியாக வேறு ஒரு வீரரை களத்தில் இறக்கி பீல்டிங் செய்ய சொன்னார்கள். பின்னர் பியூஸ் சாவ்லா 4 ஓவர்கள் வீசி முடித்த பின்னர் மீண்டும் அதே வீரர் வந்து அவருக்கு பதிலாக பீல்டிங் செய்தார். அதன் பின்னர் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சர்பராஸ் கான் மைதானத்திற்கு வரவில்லை. பேட்டிங் மட்டும் பிடித்துக் கொண்டு சென்றுவிட்டார் அவருக்கு பதிலாக கருண்நாயர் வந்து அழகான ஒரு கேட்ச் பிடித்தார். இவ்வாறாக அடிக்கடி தேவையில்லாமல் வீரர்களை மாற்றி பில்டிங்கில் கோல்மால் செய்து வருகின்றனர். இதனை அம்பயர்கள் கண்விழித்து பார்க்க வேண்டும் கூறியுள்ளார் முகமது கைஃப்.நடுவர்களே கண்துறந்து பாருங்கள் பீல்டிங்கில் கோல்மால் நடக்கிறது: முகமது கைப் 2

தில்லி கேபிடல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் திணறி வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
முதலில் ஆடிய தில்லி 129/8 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய ஹைதராபாத் அணி 131/5 ரன்களை எடுத்தது. பேர்ஸ்டோவ் அபாரமாக ஆடி 48 ரன்களை குவித்தார்.
இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 16-ஆவது ஆட்டம் வியாழக்கிழமை இரவு தில்லியில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ஹைதராபாத் பவுலிங்கை தேர்வு செய்தது.
தில்லிக்கு அதிர்ச்சி: இதையடுத்து தில்லி அணி தரப்பில் தொடக்க வீரர்களா களமிறங்கிய பிரித்வி ஷா, ஷிகர் தவன் ஆகியோர் முறையே 11, 12 என சொற்ப ரன்களுக்கு வந்த வேகத்திலேயே திரும்பி விட்டனர். அதைத் தொடர்ந்து கேப்டன் ஷிரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் அணியை சரிவில் இருந்து மீட்க முயன்றனர்.
5 ரன்களுக்கு அவுட்டான 3 வீரர்கள்: ஆனால் ரிஷப் பந்த் 5 ரன்களோடு, நபி பந்துவீச்சில் அவுட்டானார். அவருக்கு பின் ஆட வந்த ராகுல் டிவட்டியாவும் 5 ரன்களுடன் சந்தீப் சர்மா பந்துவீச்சில் அவுட்டானார். அதிரடி வீரர் காலின் இங்கிராமும் 5 ரன்கள் எடுத்த நிலையில் கெüல் பந்தில் வெளியேறினார். பந்த், ராகுல், இங்கிராம் உள்ளிட்ட 3 வீரர்களும் அடுத்தடுத்து 5 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.நடுவர்களே கண்துறந்து பாருங்கள் பீல்டிங்கில் கோல்மால் நடக்கிறது: முகமது கைப் 3
அப்போது 5 விக்கெட் இழப்புக்கு 75 ரன்களை எடுத்திருந்தது தில்லி.
அபாரமாக ஆடி வந்த கேப்டன் ஷிரேயஸ் ஐயர் 1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 43 ரன்களுக்கு ரஷித் கான் பந்தில் போல்டானார். கிறிஸ் மோரிஸ் 17 ரன்களிலும், ரபாடா 3 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினர்.
பந்துவீச்சாளர் அக்ஸர் பட்டேல் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 13 பந்துகளில் 23 ரன்களை குவித்து அவுட்டாகாமல் இருந்தார். கடைசி ஓவரின் கடைசி பந்திலும் சிக்ஸர் விளாசினார் அக்ஸர்.
இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை மட்டுமே எடுத்தது தில்லி.

ஹைதராபாத் திணறல்: 
விஜய் சங்கர்-மணிஷ் பாண்டே இணை ரன்களை குவிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10 ரன்களுடன் பாண்டேவும் அவுட்டானார். அவருக்கு விஜய்சங்கர் 16 ரன்கள் எடுத்திருந்தபோது, அக்ஸர் பட்டேல் பந்தில் அவுட்டானார்.
தீபக் ஹூடாவும் 10 ரன்களோடு வெளியேறியதால் ஹைதராபாத் அணி சிக்கலுக்கு தள்ளப்பட்டது. 6 ஓவர்களில் 60 ரன்கள் என வலுவான நிலையில் இருந்த ஹைதராபாத் 16-ஆவது ஓவரில் 50 ரன்களை எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. எனினும் பந்துவீச்சாளரான முகமது நபி 1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 17 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தார். யூசுப் பதானும் 9 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
18.3 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை எடுத்து வென்றது ஹைதராபாத். தில்லி தரப்பில் லேமிச்சேன், அக்ஸர் பட்டேல், ரபாடா, ராகுல் டிவட்டியா, இஷாந்த் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.3-ஆவது வெற்றியை பதிவு செய்த ஹைதராபாத், ஐபிஎல் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *