ஐபிஎல் அணிகள் உள்ளூர் பயிற்சியாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்கள் சிறப்பாக செயல்பட நேரம் கொடுக்க வேண்டும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் உள்ளூர் பயிற்சியாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘நாம் ஏராளமான சிறந்த பயிற்சியாளர்களை கொண்டுள்ளோம் என்று நம்புகிறேன். அவர்கள் திறமை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. கிரிக்கெட் துறையில், பயிற்சியாளர் துறையிலும் ஏராளமான திறமைகள் உள்ளன.

நாம் அவர்கள் வளர்வதற்கான நம்பிக்கை கொடுப்பது அவசியம். அப்படி செய்தால் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். ஐபிஎல் தொடரில் ஏராளமானவர்களுக்கு துணைப் பயிற்சியாளர்கள் வாய்ப்பு கிடைக்காதது எனக்கு ஏமாற்றம் அளித்தது.
ஐபிஎல் தொடரில் நிறைய இந்திய வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு உள்ளூர் சூழ்நிலைப் பற்றி அதிகமாக தெரிந்திருக்கும். பயிற்சியாளர்களும் அதேபோல்தான் தெரிந்து வைத்திருப்பார்கள். இந்திய பயிற்சியாளர்கள் மூலம் அணிகள் அதிக பயனை அடைந்திருப்பார்கள். இதனால் பயிற்சியாளர்கள் வளர வாய்ப்பு கொடுக்க வேண்டும்’’ என்றார்.
இந்நிலையில்,
ஐ.பி.எல் தொடரின் 13வது சீசன் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான வீரர்களின் ஏலம் வரும் 19ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் ஏலத்திற்கு முன் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் வீரர்களை விடுவிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ளது. சென்னை அணியில் இருந்து 5 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
1. சென்னை சூப்பர் கிங்ஸ்
விடுவிக்கப்பட்ட வீரர்கள் : சைதன்யா பிஷ்னோய், சாம் பில்லிங்ஸ், துருவ் ஷோரே, டேவிட் வில்லி மற்றும் மோஹித் சர்மா.
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா, ஃபஃப் டு பிளெசிஸ், அம்பதி ராயுடு, முரளி விஜய், ருதுராஜ் கெய்க்வாட், ஷேன் வாட்சன், டுவைன் பிராவோ, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர், மோனு குமார், என் ஜகதீசன், ஹர்பஜன் சிங், கர்ண் சார்மா, இம்ரான் தஹீர், தீபக் சஹர், கே.எம் ஆசிப்.
மீதமுள்ள தொகை : ரூ.14.60 கோடி