2018 ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு வரலாறு காணாத வரவேற்பு: முதல் வாரத்தில் டிவி பார்வையாளர்கள் எண்ணிக்கை தெரியுமா? 1

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் வார தொலைக்காட்சி, ஆன்லைன் பார்வையாளர்கள் எண்ணிக்கை 371 மில்லியன் என்று தெரியவந்துள்ளது. இது ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத அதிகபட்ச வரவேற்பாகும்.

முதல்வாரத்தில் தொலைக்காட்சியில் 288.4 மில்லியன் மக்களும் ஹாட்ஸ்டார் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்க்கில் 82.4 மில்லியன் மக்களும் பார்வையிட்டுள்ளனர்

2018 ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு வரலாறு காணாத வரவேற்பு: முதல் வாரத்தில் டிவி பார்வையாளர்கள் எண்ணிக்கை தெரியுமா? 2

“ஐபிஎல் தொடங்கிய காலத்திலிருந்து முதல் வாரத்தில் இந்த அளவுக்கு அதிகபட்ச பார்வையாளர்கள் இருந்ததில்லை” என்று ஸ்டார் இந்தியா தெரிவித்துள்ளது

குறிப்பாக தெற்கில் 30% பார்வையாளர்கள் அதிகரித்துள்ளனர். இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காள மொழிகளில் ஹாட்ஸ்டார் லைவ் ரிலே செய்து வருகிறது

தொடக்கம்தான் என்றாலும் இதுவரை ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு இல்லாத வரவேற்பு இந்த ஐபிஎல் போட்டிக்குக் கிடைத்துள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு புனேவில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. தடை முடிந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் முதன்முறையாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.2018 ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு வரலாறு காணாத வரவேற்பு: முதல் வாரத்தில் டிவி பார்வையாளர்கள் எண்ணிக்கை தெரியுமா? 3

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்த இந்த ஆட்டம் காவிரி பிரச்சினை போராட்டம் காரணமாக புனேவில் நடைபெறுகிறது. தோனி தலைமையிலான சென்னை அணி இந்த சீசனில் 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் ராஜஸ்தான் அணி 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த 2 அணிகளும் மோதவுள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கேப்டன் அஜிங்க்ய ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி தொடரை தோல்வியுடன் தொடங்கினாலும், அடுத்த 2 ஆட்டங்களிலும் வெற்றி கண்டது. ஆனால் கொல்கத்தாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் தோல்வி கண்டது. ரஹானே சீராக விளையாடி வருகிறார். அதிரடியாக விளையாடும் சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தத் தவறுகிறார்.2018 ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு வரலாறு காணாத வரவேற்பு: முதல் வாரத்தில் டிவி பார்வையாளர்கள் எண்ணிக்கை தெரியுமா? 4

கடந்த சீசனில் அதிரடியாக விளையாடிய ராகுல் திரிபாதி மிடில் ஆர்டரில் களமிறங்குவதால் அவரால் சிறந்த பங்களிப்பை வழங்க இயவில்லை. இங்கிலாந்தை சேர்ந்த ஜோஸ் பட்லர், ஆஸ்திரேலியாவின் டி’ ஆர்சி ஷார்ட் ஆகியோரிடம் இருந்தும் பெரிய அளவிலான இன்னிங்ஸ் வெளிப்படவில்லை. இதில் டி’ ஆர்சி ஷார்ட் கடந்த ஆட்டத்தில் 43 பந்துகளுக்கு 44 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். பிக்பாஷ் தொடரில் அதிரடியில் மிரட்டிய அவர், தொடக்கத்தில் மந்தமாக விளையாடுவது சற்று பின்னடைவாக உள்ளது.

பந்து வீச்சை பொறுத்தவரையில் கிருஷ்ணப்பா கவுதம், கோபால் ஆகியோர் மட்டுமே நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர். அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் ஆல்ரவுண்டராகவும், ஜெயதேவ் உனத்கட் பந்து வீச்சிலும் இதுவரை எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பலம் வாய்ந்த சென்னை அணிக்கு எதிராக ஒட்டுமொத்தமாக இணைந்து வீரர்கள் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும். போட்டிக்கான மைதானம் மாறினாலும் சென்னை அணி வீரர்களின் ஆட்டத்திறனில் குறைவிருக்காது என்றே கருதப்படுகிறது. முதல் 2 ஆட்டங்களிலும் கடைசி ஓவர்களில் த்ரில் வெற்றி கண்ட சென்னை அணி, பஞ்சாப் அணிக்கு எதிராக நெருக்கமாக அமைந்த ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது. முதல் ஆட்டத்தில் பிராவோவும், 2-வது ஆட்டத்தில் சேம் பில்லிங்ஸூம் தங்களது அதிரடி ஆட்டத்தால் வெற்றி தேடிக் கொடுத்திருந்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *