ஆக்லாந்தில் ஐசிசி கூட்டத்தில் அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது, இதனால் மே 2018-இல் தனது முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது அயர்லாந்து.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அயர்லாந்து அணியுடன் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்தை சர்வதேச கிரிக்கெட் வாரியம் கொடுத்தது.
“அடுத்த ஆண்டு நாங்கள் விளையாடவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட பாகிஸ்தான் அணியை அன்புடன் வரவேற்கிறோம். டெஸ்ட் அந்தஸ்து கிடைத்த 12 மாதத்திற்குள் எங்கள் நாட்டு ரசிகர்களுக்கு முன் அதுவும் ஒரு பெரிய அணியுடன் விளையாடுவது சந்தோசமாக இருக்கிறது,” என அயர்லாந்து அணியின் அதிகாரி கூறினார்.
அடுத்த ஆண்டு மே மாத இறுதியில் இங்கிலாந்துக்கு சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. இதனால், அயர்லாந்து அணியுடன் டெஸ்ட் போட்டி அதற்கு முன்னதாகவே விளையாடுவார்கள். அயர்லாந்துடன் விளையாட போகும் டெஸ்ட் போட்டியின் தேதி மற்றும் இடம் வரும் மாதங்களில் முடிவு செய்வார்கள்.
“இப்போதில் இருந்து வேலைகளை தொடங்கவேண்டும், இது அனைவரும் ஞாபகம் வைத்து கொண்டு மறக்கக்கூடாத ஒரு போட்டி ஆகும். எங்கள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் இதற்காக காத்திருக்கிறார்கள்,” என அயர்லாந்து அணியின் அதிகாரி கூறினார்.
“டெஸ்ட் கிரிக்கெட்டில் எங்களின் முதல் போட்டிக்கு எதிரணியாக விளையாட ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி. அயர்லாந்துடன் முதல் டெஸ்ட் போட்டி பாகிஸ்தான் அணி ஒப்புக்கொண்டு எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்,” என அவர் மேலும் கூறினார்.