உதவி கேட்டேன், ஆனால் கிடைக்கவில்லை – இர்பான் பதான்

இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் இந்திய அணிக்காக விளையாடி ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. தான் ஏன் மீண்டும் இந்திய அணிக்கு வர முடியவில்லை என்பதை பற்றி மனம்விட்டு பேசினார் இர்பான் பதான் .

அனைத்து வேலையையும் தான் இழுத்து போட்டு செய்ததால் எனக்கு காயங்கள் ஏற்பட்டது என இர்பான் பதான் கூறியிருந்தார். அவர் கடைசியாக விளையாடிய சர்வதேச போட்டியில் இர்பான் பதான் தான் ஆட்டநாயகன் விருது பெற்றார், இருந்தாலும் அவரால் மீண்டும் இந்திய அணிக்கு வர முடியவில்லை.

“நான் சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் விளையாடி கொண்டிருந்தேன். நாங்கள் தோற்று விட்டோம். அன்று இரவே விமானம் மூலம் இந்தியாவிற்கு திரும்பினேன். இரண்டு நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இங்கிலாந்துடன் மூன்று நாள் கொண்ட போட்டியில் விளையாடினேன். அந்த போட்டி முடிந்து அன்று இரவே விமானம் மூலம் பரோடாவுக்கு சென்று, மறு நாள் கர்நாடகா அணிக்கு எதிராக ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடினேன். அந்த போட்டியில் சதம் அடித்து, 20 ஓவருக்கும் மேல் பந்து வீசினேன். நான் தொடர்ந்து 9 நாள் விளையாடியுள்ளேன்,” என இர்பான் பதான் தெரிவித்தார்.

“இதனால் என் முட்டியில் ஏற்பட்டது. அடுத்த 10 நாளில், மீண்டும் இந்தியாவிற்கு சென்று டி20 போட்டியில் விளையாடினேன். என் முட்டி வலித்து கொண்டே இருந்தது. அடுத்த நாளே இங்கிலாந்துடன் மூன்று-நாள் கொண்ட போட்டியில் விளையாடினேன். அந்த போட்டியில் 45 ரன் அடித்து 20 ஓவருக்கு மேல் பந்து வீசினேன். அந்த போட்டி முடிந்து மறுநாளே, ரஞ்சி டிராபி போட்டி விளையாடினேன். முழு போட்டியும் விளையாடினேன். அந்த போட்டி முடிந்த வுடன் மீண்டும் காயம் ஏற்பட்டது. இது போல் யார் விளையாடுவார்கள்? யாரும் விளையாடமாட்டார்கள். இதனால் தான் எனக்கு காயம் ஏற்பட்டது,” என இர்பான் தெரிவித்தார்.

“அந்த அனுபவம் என்னை மனிதனாக மாற்றியது. நான் யார் என்று அனைவருக்கும் தெரியும். நடந்ததை நினைத்து பார்த்தால் தான் தெரிகிறது, முதல்-நிலை கிரிக்கெட் விளையாடுவது அவ்வுளவு எளிதல்ல என்று. ஆனால், முதல்-நிலை கிரிக்கெட் எளிது என்று சில ஜாலியாக சொல்லிவிட்டு போய்டுவார்கள்,” என மேலும் இர்பான் பதான் கூறினார்.

“நான் இதுவரை இதை பற்றி பேசியதில்லை, ஆனால் எனக்கு காயம் ஏற்படுவதற்கு முன்பு இது தான் நடந்தது. எனக்கு நிறைய எனர்ஜி இருப்பதினால், மக்கள் என்னை ‘பவர் ஹவுஸ்’ என்று அழைப்பார்கள். சில நேரம் அனைத்து வேலைகளையும் நானே செய்வேன். இது தான் நடந்தது. எனக்கு உதவி தேவைப்பட்ட போது , நான் உதவி கேட்டேன், ஆனால் யாருமே உதவி செய்யவில்லை,” என இர்பான் பதான் தெரிவித்தார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.