இத்தாலியில் சிறுவர்கள் பூங்காக்களில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது, வீட்டின் பால்கனியில் நின்றிருந்த 2 வயது குழந்தையில் தலையில் கிரிக்கெட் பந்து அடிபட்டு காயம் அடைந்ததால் அங்கௌ பூங்காக்கஈல்ல் கிரிக்கெட் விளையாடத் தடை செய்யப்பட்டுள்ளது.
இத்தாலின் பொல்சேனொ நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.இந்நகரில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைத் சேர்ந்தவர் வசித்து வருகிறார்கள்.
கிரிக்கெட் இத்தாலியில் புகழ்பெற்ற விளையாட்டாக இல்லையென்றாலும், இந்த குடிபெயர்ந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானியர்களால் விளையாடப்படுகிறது.
ஆப்படி விளையாடிக் கொண்டிருக்கும் போது தான், இம்மாதிரியான் அசம்பாவிதம் ஏற்ப்பட்டுள்ளது. இதன் காரணமாக அக்குழந்தையின் பெற்றோர் அந்நகர மேயருக்கு புகார்க் கடிதம் எழுதியுள்ளனர்.
இதன் காரணமாக அந்நகர மேயர் , நகரின் பூங்காக்களில் கிரிக்கெட் விளையாடுவதைத் தடை செய்துள்ளார்.
இத்தாலியில், 3000 குடிபெயர்ந்த பாகிஸ்தானியர்களும் 300 ஆப்கனியர்களும் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.