2018 உலகக்கோப்பை தகுதிச்சுற்று: ஸ்வீடன் உடனான தோல்வியால் நெருக்கடியில் இத்தாலி

பிஃபா நடத்தும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் அடுத்த ஆண்டு ரஷியாவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. போட்டியை நடத்தும் ரஷியாவைத் தவிர மற்ற அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடி அதனடிப்படையில் தகுதி பெற வேண்டும்.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள 55 அணிகளில் ரஷியாவைத் தவிர மற்ற 54 அணிகளில் 13 அணிகள் உலகக்கோப்பைக்கு தகுதி பெற முடியும். முதல் சுற்று போட்டிகள் முடிவில் 9 அணிகள் தகுதிப் பெற்றுவிட்டன.

நான்கு அணிகள் 2-வது சுற்றில் விளையாடி அதில் வெற்றி பெற்றால் தகுதிச் சுற்றுக்கு முன்னேற வேண்டும். இந்த நான்கு இடத்திற்காக வடக்கு அயர்லாந்து – சுவிட்சர்லாந்து, கிரோசியா – கிரீஸ், ஸ்வீடன் – இத்தாலி, டென்மார்க் – அயர்லாந்து பலப்பரீட்சை நடத்துகின்றன.

மேலே குறிப்பட்ட நான்கு ஜோடிகள் தங்களுக்குள் இரண்டு முறை (முதல் லெக், 2-வது லெக்) மோத வேண்டும். இதில் அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் அணிகள் உலகக்கோப்பைக்கு தகுதி பெறும்.

நேற்றிரவு ஸ்வீடன் – இத்தாலி அணிகளுக்கிடையிலான முதல் லெக் போட்டி ஸ்வீடனுக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஸ்வீடன் 1-0 என வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் இத்தாலிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

2-வது லெக் 13-ந்தேதி இத்தாலியில் நடைபெறுகிறது. இதில் இத்தாலி ஒரு கோல் வித்தியாசத்தில், அதாவது 2-0 எனக் கட்டாயம் வெற்றிபெற வேண்டும். இல்லையெனில் 1-0 என வெற்றி பெற்றால் ஸ்கோர் சமநிலை அடையும். அதன்பின் கூடுதல் நேரம் வழங்கப்படும். அதில் வெற்றி பெற வேண்டும்.

இதனால் இத்தாலிக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. மிலனில் நடைபெறும் போட்டியில் இத்தாலி ஒருவேளை தோல்வியடைந்தால், சுமார் 60 ஆண்டுகளுக்குப்பின் இத்தாலி உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

ஸ்வீடனில் 1958-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு இத்தாலி தகுதிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Editor:

This website uses cookies.