சச்சின் டெண்டுல்கருக்கு பந்துவீசுறதும்… விராட் கோலிக்கு பந்துவீசுறதும் ஒன்னு தான்… ரொம்ப கஷ்டம்; ஒப்புக்கொண்ட வங்கதேச பயிற்சியாளர் !!

சச்சின் டெண்டுல்கருக்கு பந்துவீசுறதும்… விராட் கோலிக்கு பந்துவீசுறதும் ஒன்னு தான்… ரொம்ப கஷ்டம்; ஒப்புக்கொண்ட வங்கதேச பயிற்சியாளர் !!

விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவது என்பது சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை வீழ்த்துவது போன்று மிகவும் கடினம் என்று பங்களாதேஷ் அணியின் பௌலிங் பயிற்சியாளர் ஆலன் டொனால்ட் தெரிவித்துள்ளார்.

வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி  தற்போது நடைபெற்று வறுகிறது.

இந்த போட்டியை எப்படியாவது வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டும் என கடுமையான முயற்சியில் பங்களாதேஷ் அணி ஈடுபட்டுள்ளது. இதனால் இந்திய அணி பேட்ஸ்மேன்களில் விக்கெட் வீழ்த்துவதற்கு சரியான திட்டத்தை பங்களாதேஷ் அணி வகுத்து வைத்துள்ளதாக அந்த அணியின் பௌலிங் பயிற்சியாளர் ஆலன் டொனால்ட் தேர்வித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டயளித்த ஆலன் டொனால்ட்,“இந்திய அணி பேட்ஸ்மென்களின் விக்கெட் உண்மையில் மிகவும் கடினமானது, குறிப்பாக விராட் கோலிக்கு பந்து வீசுவது என்பது இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை வீழ்த்துவது போன்றதாகும், சச்சின் டெண்டுல்கர் மைதானத்தில் எதிரணிக்கு எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதை நாம் அனைவருக்கும் நன்றாக இருக்கிறது, அதேபோன்றுதான் விராட் கோலி போன்ற வீரருக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி அவர் அவரின் விக்கெட்டை வீழ்த்தி விட வேண்டும், அந்த வாய்ப்பை நாம் தவறவிட்டால் அதற்கான இழப்பு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் அதற்கு பின்பு விக்கெட்டை கொடுப்பதற்கு அவர் அந்த அளவிற்கு வாய்ப்பு கொடுக்க மாட்டார். இதனால் நாங்கள் விராட் கோலி மற்றும் கே எல் ராகுலுக்கு எதிராக நல்ல திட்டத்தை வைத்துள்ளோம்”.

“இதில்,விராட் கோலி போன்ற ஒரு வீரர் கிரீசை நோக்கி நடந்து வரும் பொழுது அந்த உணர்வு அனைவரிடம் இருக்கும், அவருக்கு பந்து வீசுவது என்பது உண்மையில் மிகவும் கடினமான ஒன்றாகும், இதனால் ஆட்டம் மிகவும் சூடு பிடிக்கும் என்னை பொறுத்தவரையில் இன்றைய போட்டியில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என நினைக்கிறேன். மேலும் விராட் கோலி இந்த டெஸ்ட் சீரியஸில் எப்படியாவது சதத்தை அடித்து விட வேண்டும் என பசியோடு உள்ளார்” என்றும் ஆலன் டொனால்ட் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.