முன்னாள் தென்னாபிரிக்கா வீரர் ஜாக் ருடால்ப் இந்த இங்கிலிஷ் சீசன் முடிந்ததும் அனைத்து விதமான போட்டிகளிலும் ஓய்வு பெற போவதாக கூறியுள்ளார். கவுண்டி சாம்பியன்ஸ்ஷிப்பில் கிளைமோர்கன் அணியின் கேப்டனாக விலகினார் ஆனால், அவர் ஓய்வு பெரும் வரை டி20 அணிக்கு கேப்டனாக இருப்பார்.
“என்னுடைய கிரிக்கெட் பயணத்தை முடித்து கொள்ள இது தான் சரியான நேரம்,” என ருடால்ப் கூறினார்.
“என்னுடைய 20 வருட கிரிக்கெட் பயணம் சந்தோஷம் அளித்தது. இந்த சீசனின் முடிவில் ஓய்வு பெற்று, மீதி இருக்கும் நாட்களை என்னுடைய குடும்பத்துடன் செலவழிக்க போகிறேன்,” என மேலும் கூறினார்.
அவர் கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2012-இல் தென்னாப்ரிக்காவுக்காக விளையாடினார். அதன் பிறகு அவர் விளையாடவில்லை. தன்னுடைய முதல் முதல்-நிலை போட்டி 1997-98 -இல் விளையாடினார். முதல் டெஸ்ட் போட்டி 2003-இல் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடி, 222 ரன் அடித்தார்.
2003 – 2006 காலத்தில் 35 டெஸ்ட் விளையாடிய அவர், பிறகு 2007-இல் யார்க்க்ஷயர் அணிக்கு விளையாட ஆரம்பித்தார். இதனால், தென்னாபிரிக்கா அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. அத்துடன் 2011-இல் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். 2011 – 2012 இல் 13 டெஸ்ட் விளையாடினார். மீண்டும் அவரை அணியில் சேர்க்க வில்லை.
அவர் இதுவரை தென்னாப்ரிக்காவுக்கு 45 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2622 ரன்னும், ஒருநாள் போட்டியில் 1174 ரன்னும் அடித்திருக்கிறார். 287 முதல்-நிலை போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 19510 ரன்கள் குவித்துள்ளார். முதல்-நிலை கிரிக்கெட்டில் 50 சதம் மற்றும் 93 அரைசதம் அடித்துள்ளார்.