இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியில் ஆஸ்திரேலிய டாஸ் வென்று பேட்டிங் செய்ய துவக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் களம் இறங்கி இந்திய அணியின் பந்து வீச்சை தவிடு பொடியாக்கினர்.
இந்த ஜோடி துவக்கத்திலேயே நன்றாக ஆடி 218 ரன் சேர்த்து ரெக்கார்டு செய்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் திணறிவந்த இந்திய அணிக்கு தோனியினால் கூட கை கொடுக்கமுடியவில்லை. ஆம், அவருக்கு வந்த எளிதான ஸ்டம்பிங்கை கூட ‘ப்ரெய்ன் ஃபேடு’ ஆகி விட்டுவிட்டார்.
Photo by Deepak Malik / BCCI / SPORTZPICS
பின்னர் அதிரடியாக ஆடிய டேவிட் வார்னர் சதம் அடித்தார். இந்த இணையை எப்படியாவது பிரித்து விட வேண்டும் என கடைசியாக தனது துருப்பு சீட்டான கேதார் ஜாதவை கையில் எடுத்தார் விராட் கோலி.
35ஆவது ஓவரை வீசிய ஜாதவுக்கு வார்னரின் விக்கெட் பரிசாக கிடைத்தது. அவர் லாங் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அந்த கேட்சை அக்சர் படேல் பிடித்ததும் கொண்டாட்டத்தில் இருந்த கேதர் ஜாதவ்,
வார்னரைப் பார்த்து பெவிலியன் திரும்பி போ என வழியனுப்பி வைத்தார், அவரது விரலை சுட்டி காட்டி அனுப்பினார் கேதர் ஜாதவ்.
இப்படி தேவையிள்ளாத வேலைகளை செய்தால் ரெட் கார்டு கொடுக்கப்படும் என ஐ.சி.சி.அறிவித்தும் ஜாதவ் தனது ஆக்ரோசத்தை வெளிப்படுத்தியுள்ளார். 28ஆம் தேதியிலிருந்து ஐ.சி.சியின் புதிய விதிகள் செயல்படும் என அறிவித்திருந்தாலும், இந்தியா-ஆஸ்திரேலியத் தொடருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கேதர் ஜாதவுக்கு பிரச்சனை வர வாய்ப்பில்லை