நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆட்டத்தில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அந்த அணி முன்னிலை வகிக்கிறது.
இதில் பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தில் மே.இ. அணி 3 ஓவர்கள் குறைவாக வீசியிருந்தது. இதையடுத்து ஹோல்டருக்கு போட்டி ஊதியத்தில் 60 சதவீதம் அபராதமும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடையும் விதிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய மே.இ. வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வரும் 9-ம் தேதி அன்று ஹேமில்டனில் தொடங்கவுள்ள 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஹோல்டர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, வெலிங்டனில் நடந்தது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 134 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 520 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.
இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்திருந்தது. பிராத்வெயிட் 79 ரன்களுடனும், ஷாய் ஹோப் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஹோப் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்தவர்களும் நியூசிலாந்தின் நேர்த்தியான பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து அந்த அணி 319 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

நியூசிலாந்து தரப்பில் ஹென்றி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போல்ட், கிராண்ட் ஹோம், வாக்னர் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர்.