வெற்றிக்கு காரணம் ஒஸ்னே தாஸ் தான்: விண்டீஸ் கேப்டன் ஹோல்டர் 4

நாட்டிங்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பை 2011-ன் 2வது ஆட்டம் உணவு இடைவேளக்கு முன்னதாகவே பாகிஸ்தானின் படுதோல்வியில் முடிய, மே.இ.தீவுகள் கிறிஸ் கெய்லின் காட்டடி தர்பாரில் 13.4 ஓவர்களில் 108/3 என்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட பாகிஸ்தான் அணி ஒஷென் தாமஸ் (4), ஜேசன் ஹோல்டர் (3), ரஸல் (2) ஆகியோர் பவுன்சர் பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் 105 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் 13.4 ஓவர்களில் 108/3 என்று வெற்றி பெற்றது. மொத்தமே ஆட்டம் 35.2 ஒவர்கள்தான் நீடித்தது. உணவு இடைவேளைக்கு முன்பாகவே முடிந்தது.

முதல் பாதியை அறியாது, அலுவலகம் முடித்து விட்டு 2வது பாதியை ரிலாக்ஸ்டாக பார்க்கலாம் என்று தொலைக்காட்சியைத் திறக்கும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சிதான் மிஞ்சும்.

விரட்டலை எளிதாக்கினார் கிறிஸ் கெய்ல் 34 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 50 ரன்களை கெய்ல் எடுக்க நிகோலஸ் பூரன் 19 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 34 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழந்தார்.வெற்றிக்கு காரணம் ஒஸ்னே தாஸ் தான்: விண்டீஸ் கேப்டன் ஹோல்டர் 5

அதுவும் வஹாப் ரியாஸ் வீசிய 14வது ஓவரின் 4வது பந்தை ஒதுங்கிக் கொண்டு டீப் மிட்விக்கெட்டில் ஒரு அரக்கத்தனமான சிக்சரை அடித்து பாகிஸ்தானின் மனவேதனையை அதிகரித்த ஷாட் வெற்றி ஷாட்டாக அமைந்தது.

வஹாப் ரியாஸ் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், ஒருவேளை அவர் கெய்லை விரைவில் வீழ்த்தியிருந்தால் மே.இ.தீவுகளுக்கு ஒரு சிறு பதற்றமாவது இருந்திருக்கும்.

மொகமது ஆமிர் முதல் ஓவரில் 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஹசன் அலி அடுத்த ஓவரில் வீச வந்தார். பவுன்சரை டாப் எட்ஜ் செய்து பவுண்டரிக்கு அனுப்பிய கிறிஸ் கெய்ல் அடுத்த பந்தை தேர்ட் மேனுக்கு பவுண்டரி அனுப்பினார்.

 

மீண்டும் ஹசன் அலி தன் அடுத்த ஓவருக்கு வர கெய்ல் எப்போதும் ஒரு ஓவர்தான் பார்ப்பார், அடுத்த ஓவரைக் கொடுத்தால் வெளுத்து வாங்கி விடுவார் என்பது உலகிற்கே தெரியும், அதே போல்தான் ஹசன் அலி வீசிய ஆஃப் கட்டரை லாங் ஆனுக்கு மேல் ஒரு சிக்ஸ். அடுத்த பந்தையும் டி20 பாணியில் முன் காலை விலக்கிக் கொண்டு ஒரு விளாசு விளாசினார் பந்து நேராக சிக்ஸ் சென்றது. இது மிஸ் ஹிட் ஆனாலும் சிக்ஸ்.

வெற்றிக்கு காரணம் ஒஸ்னே தாஸ் தான்: விண்டீஸ் கேப்டன் ஹோல்டர் 6

5வது ஓவரில் ஷேய் ஹோப் 11 ரன்களில் ஆமிரிடம் அவுட் ஆகி வெளியேறினார். ஆனால் கெய்லை கட்டுப்படுத்த முடியவில்லை மீண்டும் ஹசன் அலியிடம் கொடுத்த கேப்டன் சர்பராஸ் வேதனையை அதிகரிக்க கெய்ல் மீண்டும் 2 பவுண்டரிகளை விளாசினார்.

ஆனால் ஆமிர் மிக அற்புதமாக வீசிய பந்தில் எட்ஜ் ஆகி டேரன் பிராவோ டக் அவுட் ஆனார். அதன் பிறகு வஹாப் ரியாஸைக் கொண்டு வர முதல் ஓவரை கெய்ல் வெறுமனே ஆடினார் அது மெய்டன் ஆனது.

ஆனால் அடுத்த ஓவரில் மீண்டும் வஹாப் ரியாஸ் வர, எப்போதும் ஒரு ஓவர்தான் என்ற கொள்கையின் படி கிறிஸ் கெய்ல் 1 சிக்ஸ், 2 பவுண்டரிகளை விளாசித்தள்ளினார். ஃபைன் லெக்கில் பிறகு ஒரு சிங்கிள் தட்டி 33 பந்துகளில் கெய்ல் அரைசதம் கண்டார். அதே ஓவரில் ஆமிரிடம் கெய்ல் 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.

12வது ஓவரில் ஹெட்மையருக்கு ஒரு கடினமான கேட்சை விட 1 ரன் வந்தது. வஹாப் ரியாஸ் ஏமாற்றமடைந்தார், ஆனால் ஸ்ட்ரைக்குகு வந்த நிகோலஸ் பூரன் தேர்ட்மேனில் ஒரு பவுண்டரியையும் அடுத்ததாக திகைப்பூட்டும் பிளாட் பேட் ஷாட்டில் மிட் ஆனுக்கு மேல் ‘இனி வீசாதே’ என்பது போல் ஒரு சிக்சரை விளாசினார் பூரன். கடைசியிலும் வஹாப் ரியாஸை ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் விளாசினார் பூரன் மே.இ.தீவுகள் 13.4 ஒவர்களில் 108/3 என்று ஆனது.வெற்றிக்கு காரணம் ஒஸ்னே தாஸ் தான்: விண்டீஸ் கேப்டன் ஹோல்டர் 7

மெய்டனுடன் தொடங்கிய வஹாப் ரியாஸ் கடைசியில் 3.4 ஓவர்கள் 1 மெய்டன் 40 ரன்கள் என்று சாத்துமுறை வாங்கினார். மொகமது ஆமிர் 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது பாகிஸ்தானுக்கு இந்தப் போட்டியின் ஒரே ஆறுதல். ஹசன் அலி 4 ஓவர் 39 ரன்கள். ஆட்டம் மொத்தம் மூன்றரை மணி நேரங்களே சுமார் 35 ஓவர்களே நீடித்தது.

4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஒஷேன் தாமஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டர், மே.இ.தீவுகளுக்கு மிகப்பெரிய வெற்றி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *