இங்கிலாந்து - இந்தியா 2018: மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஜேசன் ராய் ஆடுவது சந்தேகம் !! 1
England's Jason Roy celebrates his half-century during the fourth One Day International (ODI) cricket match between England and Australia at The Riverside in Chester-le-Street, on June 21, 2018. (Photo by Lindsey PARNABY / AFP) / RESTRICTED TO EDITORIAL USE. NO ASSOCIATION WITH DIRECT COMPETITOR OF SPONSOR, PARTNER, OR SUPPLIER OF THE ECB (Photo credit should read LINDSEY PARNABY/AFP/Getty Images)

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் தனது வலது கையில் அடிபட காயமடைந்தார்.  அலெக்ஸ் ஹேல்ஸ் ஏற்கனவே காயமடைந்ததால், டேவிட் மாலன் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 4 போட்டியில் விளையாடுவதற்கு சென்றுள்ளார், அவருக்கு பதில் ஜேம்ஸ் வின்ஸ் இணைந்திருப்பது சாதகமான கூடுதலாக இருக்கும் என்று பேஸ் மார்க் வூட் கூறினார். இந்த மூன்றாவது போட்டியில் ஜேசன் ராய் ஆடுவது சந்தேகம் ஆகியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.

இங்கிலாந்து - இந்தியா 2018: மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஜேசன் ராய் ஆடுவது சந்தேகம் !! 2

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 போட்டியில், தொடரை கைப்பற்றிய இந்திய அணி, இப்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. தொடர் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் மூன்றா வது போட்டி லீட்ஸில் இன்று நடக்கிறது.
முதல் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங், பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. ரோகித், விராத் கோலி ஆகியோர் மிரட்டினர். குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி அசத்தினார்.

இங்கிலாந்து - இந்தியா 2018: மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஜேசன் ராய் ஆடுவது சந்தேகம் !! 3

ஆனால் 2-வது போட்டி அப்படியே தலைகீழானது. தொடக்க விக்கெட் விரைவில் சரிய, அடுத்து வந்தவர் களில் விராத் கோலியும் சுரேஷ் ரெய்னாவும் ஓரளவு நிலைத்து நின்றனர். மற்றவர்கள் சொதப்பியதால் தோல்வியை தழுவியது. முன்னாள் கேப்டன் தோனி, 59 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவரது ஆமை வேக ஆட்டம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்தப் போட்டியிலும் அதே மிடில் ஆர்டர் சிக்கல்தான். தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தவான் அதிரடியாக ஆடி எளிதாக அவுட் ஆவதை விட்டுவிட்டு முதல் பத்து ஓவர்கள் வரை மெதுவாக ஆடலாம்.

இங்கிலாந்து - இந்தியா 2018: மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஜேசன் ராய் ஆடுவது சந்தேகம் !! 4

டி20 போட்டியில் கலக்கிய கே.எல்.ராகுல் ஒரு நாள் போட்டிகளில் கடந்த இரண்டு போட்டியிலும் விரைவில் அவுட் ஆகி ஏமாற்றம் அளிக்கிறார். சுரேஷ் ரெய்னா, தோனி, ஹர்திக் ஆகியோர் இன்றைய போட்டியிலும் நிலைத்து நின்று ஆட வேண்டும். கே.எல்.ராகுல் அல்லது சுரேஷ் ரெய்னா ஆகியோரில் ஒருவர் உட்கார வைக்கப்பட்டு இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

பந்துவீச்சிலும் இந்திய வீரர்கள் தாராளம் காட்டுகின்றனர். முதல் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கினார். உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல் ஆகியோரும் அப்படியே. பும்ரா, புவனேஷ்வர்குமார் ஆகியோர் இல்லாத குறை அப்படியே தெரிகிறது. காயம் குணமானால் இன்றைய போட்டியில் புவனேஷ்வர்குமார் களமிறங்கலாம் என தெரிகிறது. முதல் போட்டியில் குல்தீப், சேஹல் சுழலில் தடுமாறிய இங்கிலாந்து வீரர்கள் இப்போது அவர்கள் பந்துகளைப் பதம் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

இங்கிலாந்து - இந்தியா 2018: மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஜேசன் ராய் ஆடுவது சந்தேகம் !! 5

இங்கிலாந்து அணி கடந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டது. அந்த அணியில் ஜோ ரூட் சதம் அடித்து ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார். கேப்டன் மோர்கன், ஜேசன் ராய், பேர்ஸ்டோ ஆகியோரும் பேட்டிங்கில் மிரட்டுகிறார்கள். பந்து வீச்சில் பிளங்கெட், டேவிட் வில்லி, சுழலில் ரஷித் ஆகியோர், இந்திய பேட்ஸ்மேன்களை திணறடிக்கிறார்கள்.

2011-ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி இழந்ததில்லை. அதனால் இன்றைய போட்டி யில் வெற்றி கண்டு, தொடரை கைப்பற்ற இந்திய அணி தீவிரம் காட்டும்.  சொந்த மண்ணில் தொடரை இழக்காமல் இருக்க இங்கிலாந்து அணியும் போராடும் என்பதால் பரபரப்பாக இருக்கும். போட்டி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *