இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களான ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜேசன் ராய் இருவரும் ஆட்டத்தின் விதிகளை மீறியதால் போட்டி ஊதியத்தில் இருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பையில் விதிமீறல்- இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு அபராதம்
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களான ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜேசன் ராய் இருவரும் ஆட்டத்தின் விதிகளை மீறியதால் போட்டி ஊதியத்தில் இருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை விழ்த்தி பாகிஸ்தான் அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யும் போது 14வது ஓவரில் ஜேசன் ராய் கேட்ச் ஒன்றை தவற விட்டார். அப்போது அவர் தகாத வார்த்தையை பயன்படுத்தினர். இதனால் இவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் இதே ஆட்டத்தில் மற்றொரு இங்கிலாந்து வீரரான ஜோஃப்ரா ஆர்ச்சர், பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யும் போது 27வது ஓவரில் அவர் வீசிய பந்தை வைட் என நடுவர் தெரிவித்ததால் அதிருப்தி அடைந்தார். அத்துடன் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனவே இவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் , ராய் மற்றும் ஆர்ச்சர் ஆகியோரின் மீது ஒழுங்குமுறைப் பதிவுகளில் ஒரு சஸ்பென்ஷன் புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டு வருட காலத்திற்குள் நான்கு சஸ்பென்ஷன் புள்ளிகள் பெற்றால் அந்த வீரர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
7 பந்தில் அரை சதம் அடித்த ரூட், 97 பந்தில் சதம் அடித்தார். அவர் 107 ரன் எடுத்திருந்தபோது, ஷதாப் கான் பந்துவீச்சில் ஹபீஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அனல் பறக்க ஆடிய பட்லர் 75 பந்தில் சதம் அடித்தார். அவர் களத்தில் நிற்கும் வரை இங்கிலாந்து அணி வென்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முகமது ஆமிர் பந்துவீச்சில், 103 ரன்னில் அவர் அவுட் ஆக, ஆட்டத்தின் போக்கு மாறியது. அடுத்து வந்தவர்களில் வோக்ஸ் மட்டும் 21 ரன் எடுத்தார். மற்றவர்கள் நிலைக்கவில்லை.

50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 334 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 14 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.