டி20, ஒருநாள் தொடா்களில் பங்கேற்பதற்காக மே.இ.தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-1 என கைப்பற்றியது இந்தியா. இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது. 2-வது ஒருநாள் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் 2-வது ஒருநாள் ஆட்டத்துக்கான இந்திய அணியின் வலைப்பயிற்சியில் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவும் இணைந்துள்ளார்.
பும்ராவுக்கு அவரது கழுத்தின் கீழ்பகுதியில் முறிவு இருந்தது. இதனால் அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துபோது கடைசியாக விளையாடினார் பும்ரா. அதன்பிறகு காயம் காரணமாக அவர் எந்த ஒரு சர்வதேசப் போட்டியிலும் பங்கேற்கவில்லை.
இதனிடையே காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள பும்ரா, விசாகப்பட்டினத்தில் இந்திய அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதன் புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
ஜனவரி மாதம் இந்திய அணி இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுடன் விளையாடவுள்ளது. இதன்பிறகு, நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடவுள்ளது. ஜனவரி 14 முதல் தொடங்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பும்ரா முழு உடற்தகுதியுடன் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Look who's here ?? pic.twitter.com/Ex7aknjDBn
— BCCI (@BCCI) December 17, 2019