அஸ்வின் சாதனையை அசால்டாக காலி செய்த பும்ரா!! 1

உலகின் நம்பர்-1 பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா (25), அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் எனும் சாதனையை வெள்ளிக்கிழமை படைத்தார். மே.இ.தீவுகள் உடனான டெஸ்ட் போட்டியின் போது பும்ரா இந்த புதிய சாதனையைப் படைத்தார்.

வெங்கடேஷ் பிரசாத் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 13 டெஸ்ட்களில் இச்சாதனையை படைத்திருந்தனர். ஆனால், பும்ரா 11 டெஸ்ட்களில் இந்த மைல்கல்லை எட்டினார். மேலும் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் நரேந்திர ஹிர்வானி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோருடன் 3-ஆம் இடத்தை பகிர்ந்துகொண்டார்.

அஸ்வின் சாதனையை அசால்டாக காலி செய்த பும்ரா!! 2

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இரண்டாவது நாளான நேற்று இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோவை அவுட் ஆக்கினார். இதன்மூலம் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் தனது 50 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார்.

இதன்மூலம் அவர் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் படைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளார். அதாவது அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 2,597 பந்துகளில் தனது 50 விக்கெட்டை அடைந்தார். ஆனால் பும்ரா 2,464 பந்துகளில் தனது 50 விக்கெட்களை எடுத்துள்ளார். எனவே குறைந்த பந்துகளில் 50 விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.அஸ்வின் சாதனையை அசால்டாக காலி செய்த பும்ரா!! 3

எனினும் குறைந்த போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் இன்னும் முதலிடத்தில் உள்ளார். இவர் 9 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்களை எடுத்துள்ளார். பும்ரா தனது 11ஆவது டெஸ்ட் போட்டியில் 50ஆவது விக்கெட்டை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.  அதன்படி ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ரஹானே 81 ரன்களும் ஜடேஜா 58 ரன்களும் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெமர் ரோச் 4 விக்கெட்டுகளும் கேப்ரியல் 3 விக்கெட்டுகளும் சேஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அஸ்வின் சாதனையை அசால்டாக காலி செய்த பும்ரா!! 4பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது வெஸ்ட் இண்டீஸ். அந்த அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. இதனால், நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி, 8 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. அதிகப்பட்சமாக சேஸ் 48 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹோல்டர் 10 ரன்களுடனும் கம்மின்ஸ் ரன் கணக்கைத் தொடங்காமலும் களத்தில் உள்ளனர்.

இந்திய தரப்பில் இஷாந்த் சர்மா அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா, ஷமி, ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 3 ஆம் நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *