உலகின் சிறந்த யார்க்கர் பும்ராவிடம் தான் உள்ளது: வாசிம் அகரம்! 1

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, உலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் புகழாரம் சூட்டியுள்ளார்.

பும்ரா உலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர்: வாசிம் அக்ரம் புகழாரம்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, உலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் புகழாரம் சூட்டியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தற்போதுள்ள சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா யார்க்கர் வீசுவதில் சிறப்பாக உள்ளார். இந்த ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் பும்ரா கடைசி கட்ட பந்துவீச்சில் பெரிய வித்தியாசத்தையும், தாக்கத்தையும் நிச்சயம் ஏற்படுத்துவார்.உலகின் சிறந்த யார்க்கர் பும்ராவிடம் தான் உள்ளது: வாசிம் அகரம்! 2

அவர் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களிடம் இருந்து வித்தியாசமான ஆக்சனுடன் பந்து வீசுகிறார். பும்ராவின் சிறப்பே அவர் சாதாரணமாக யார்க்கர்களை வீசும் திறமை பெற்று இருப்பதுதான். வக்கார் யூனிஸ்போல் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டியிலும் யார்க்கர் பந்து வீசுகிறார்.

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றது மிகப்பெரிய சாதனையாகும். பலவீனமான ஆஸ்திரேலிய அணியை பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை. உண்மையில் இந்திய அணியினர் முழு திறமையை வெளிப்படுத்தினர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டெய்லி டெலிகிராப்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ரவிசாஸ்திரி கூறியதாவது:-

டோனிக்கு நிகரான வீரர் யாரும் இல்லை. அவருக்கு மாற்று கிடையாது. அவரை போன்ற வீரர்கள் 30-40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வருவார்கள்.

ஆகவே தான் டோனி ஆடும் வரை அவரது ஆட்டத்தை ரசியுங்கள் என்று நான் இந்தியர்களிடம் சொல்கிறேன். அவர் இல்லையென்றால் அந்த இடம் வெற்றிடமாகவே இருக்கும்.

உலகின் சிறந்த யார்க்கர் பும்ராவிடம் தான் உள்ளது: வாசிம் அகரம்! 3

ரிசப்பன்ட் இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் விளையாட்டுக்கு ஒரு தூதராக நீண்டகாலம் இருப்பது போல் இன்னொருவர் உருவாவது கடினம்.

ரிசப்பன்டின் ஹீரோ டோனி தான். ஒவ்வொரு நாளும் அவருடன் பேசுகிறார். டெஸ்ட் தொடரின் போது அவர் டோனியிடம் நிறைய பேசியுள்ளார் என்றே நினைக்கிறேன். இப்படிப்பட்ட பரஸ்பர மரியாதை மிகப்பெரிய வி‌ஷயமாகும்.

இதேபோல வீராட் கோலி- டோனி இடையேயான பரஸ்பர மரியாதை நம்ப முடியாத ஒன்றாகும். இதனால் ஓய்வு அறையில் எனது பணி எளிதாகிறது.

வீரர்களின் ஆட்டத்தில் நான் அதிகம் தலையீடுவது இல்லை. தேவைப்பட்டால் சில வேளைகளில் ஆலோசனை வழங்குவேன்.

ஒரு வீரர் எதை பார்த்து பயப்படுகிறார் என்றால் நான் தலையில் தட்டி சரி செய்வேன். இந்த வி‌ஷயத்தில் நான் மோசமானவன். இல்லையென்றால் நான் பயிற்சியாளராக இருக்க முடியாது.

இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *