ஜஸ்பிரிட் பும்ராவை எதிர்கொள்ள அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் பயம்: பிராட் ஹாட்ஜ் 1

ஜஸ்பிரிட் பும்ராவை எதிர்கொள்ள அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் ஒரு பயம்தான் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாட்ஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது…

ஜஸ்பிரிட் பும்ரா அனைவருக்கும் ஒரு பயத்தை ஏற்படுத்தி விட்டார் நீங்கள் எந்த பேட்ஸ்மேனை வேண்டுமானாலும் கேளுங்கள் அவர்களுக்கு ஜஸ்பிரிட் பும்ரா எதிர் கொள்வதே ஒரு கடினமான விஷயமாகும். அற்புதமாகவும் வேகமாகவும் அனைத்து பக்கமும் பந்துகளைத் திருப்புகிறார். ஜஸ்பிரிட் பும்ரா ஒரு சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளர் என்று கூறினார் அவர்.

‘பும்ரா பற்றி நான் முதலில் கொண்டிருந்த எண்ணம் தவறாகிவிட்டது’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறினார்.

ஜஸ்பிரிட் பும்ராவை எதிர்கொள்ள அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் பயம்: பிராட் ஹாட்ஜ் 2

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. குறுகிய ஓவர் போட்டிகளில் கலக்கிய பும்ரா, பின்னர் டெஸ்ட் போட்டிகளில் சேர்க்கப்பட்டார். அவரது பந்துவீச்சு ஆக்‌ஷன் வித்தியாசமானது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர் அவரது ஆக்‌ஷனை கிண்டலடித்தனர். ஆனால், அவர்களுக்கு தனது பந்துவீச்சு திறமையால் பதிலடி கொடுத்தார் பும்ரா.

இப்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது, இந்திய அணி. இந்த போட்டிகளில் பும்ரா சிறப்பாக பந்துவீசி விக்கெட் வீழ்த்தி வருகிறார். மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற அவரது பந்துவீச்சும் காரணம். அவர் ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.

இந்த மைதானத்தில் 37 வருடங்களுக்கு முன் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. அப்போது இந்திய அணியின் சார்பில், இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்தியிருந்தார் கபில்தேவ். அவர், இப்போது பும்ராவை புகழ்ந்துள்ளார். இவர் ஏற்கனவே, பும்ராவின் பந்துவீச்சு ஆக்‌ஷனை ஏற்கவில்லை. இவர் ஸ்டைலே வேறு மாதிரி இருக்கிறதே…இவர் எப்படி பந்து வீசப் போகிறார் என்று நினைப்பதாகக் கூயிருந்தார்.

இந்நிலையில் தனது நினைப்பை பும்ரா பொய்யாக்கிவிட்டார் என்று தெரிவித்துள்ளார் கபில்தேவ்.

ஜஸ்பிரிட் பும்ராவை எதிர்கொள்ள அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் பயம்: பிராட் ஹாட்ஜ் 3
ADELAIDE, AUSTRALIA – DECEMBER 07: Jasprit Bumrah of India bowls during day two of the First Test match in the series between Australia and India 

‘’சர்வதேச போட்டிகளில் பும்ரா, சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுவருகிறார். முதன்முறையாக அவரை நான் பார்த்தபோது, இவர் நீண்ட நாள் அணியில் நீடிப்பாரா என்று நினைத்தேன். அதை பொய்யாக்கிவிட்டார். ஆஸ்திரேலியாவில் அவரது பந்துவீச்சு சிறப்பானதாக இருந்தது. அவரை பாராட்டுகிறேன். அவரது மனநிலை வலிமையானதாக இருக்கிறது. அவரிடம் சிறப்பு தோள்கள் இருக்கின்றன.

இதுபோன்ற பந்துவீச்சாளர்கள் தனித்துவமானவர்கள். அவர் புதிய மற்றும் பழைய பந்தில் சிறப்பாக வீசுகிறார். எங்கு வீச வேண்டும் என்பதை சரியாக கணித்து வீசுகிறார். எதிரணிக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் பவுன்சரையும் அருமையாக வீசுகிறார். மனநிலை முக்கியம். இதெல்லாம் சேர்ந்துதான் அவரை முக்கியமான பந்துவீச்சாளராக மாற்றியிருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *