இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேஸ்ப்ரிட் பும்ராவின் தாத்தா சந்தோக் சிங் பும்ரா மரணம் அடைந்தார். அவரது உடலை காந்தி பிரிட்ஜ் மற்றும் ததிச்சி பிரிட்ஜிக்கும் நடுவில் இருக்கும் சபர்மதி ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டது.
கிரிக்கெட் வீரரை பார்க்க 84 வயதான சந்தோக் சிங் பும்ரா அகமதாபாத்திற்கு சென்று இருக்கிறார், அதன் பிறகு அவரை காணவில்லை என அவரது குடும்பத்தினர்கள் புகார் அளித்துள்ளார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேஸ்ப்ரிட் பும்ராவின் குடும்பம் அவரின் தாத்தாவை பார்க்கவோ பேசவோ கூடாது என இருக்கிறார்கள். இதனால், காணாமல் போன அவரை கண்டுபிடிக்க வஸ்திரப்பூர் போலீஸிடம் புகார் அளித்தனர்.
டிசம்பர் 5ஆம் ஜேஸ்ப்ரிட் பும்ராவின் பிறந்தநாள் அன்று அவரை காண பும்ராவின் தாத்தா சென்றுள்ளார். ஆனால், அவரால் பும்ராவை பார்க்க முடியவில்லை. டிசம்பர் 8ஆம் தேதி அவரது மகன் பல்விந்தர் சிங்கிடம் அவரது உடல்நலமற்ற மனைவியை பார்க்கப்போவதாக கூறியிருக்கிறார்.
சந்தோக்சிங் பும்ரா ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகத் திகழ்ந்தவர். ஆனால் ஜஸ்பிரித் பும்ராவின் தந்தையும் சந்தோக் மகனுமான ஜஸ்பிர் பும்ரா 2001-ல் மரணமடைந்த பிறகு தொழிலில் பெரும் நஷ்டமடைய தனது தொழிற்சாலைகளை சந்தோக் சிங் பும்ரா விற்க நேரிட்டது.
இந்திய அணியின் வளரும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவும் அவரது 84 வயது தாத்தாவும் சந்தித்து 17 ஆண்டுகள் ஆகின்றன.
இது குறித்து அவர் கூறும்போது, “சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நாட்டுக்காக என் பேரன் பும்ரா சிறப்பாக ஆடுவதைப் பார்க்கும் போது மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. அவன் நிறைய வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். நான் கண்ணை மூடுவதற்குள் அவனை ஒரு முறை சந்திப்பேன்” என்று இந்துஸ்தான் டைம்ஸ் இதழில் கூறியுள்ளார்.
ஆனால், தற்போது ஜேஸ்ப்ரிட் பும்ராவின் தாத்தா சந்தோக் சிங் மரணம் அடைந்துவிட்டதால், இனி இருவரும் பார்த்துக்கொள்ள முடியாது நிலை ஏற்பட்டுவிட்டது.