ஜுலன் கோஸ்வாமியின் தபால் தலையை வெளியிட்டு அவரை கௌரவித்துள்ளது தபால் துறை

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜுலன் கோஸ்வாமி தனது கிரிக்கெட் பயணத்தில் மேலும் ஒரு சிறப்பை பெற்றுள்ளார். ஜுலன் கோஸ்வாமி தன்னுடைய கிரிக்கெட்டின் சாதனைகளுக்காக, இந்திய தபால் துறையால் அவருடைய தபால் தலை வெளியிடப்பட்டு, சிறப்பிக்க பெற்றுள்ளார்.

வெளியான தகவலின் படி, அவருடைய தபால் தலை கல்கட்டா விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தில், முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி முன்னிலையில் வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 20) வெளியிடப்பட்டுள்ளது.

ஜுலன் கோஸ்வாமி மகளிருக்கான சர்வதேச ஒருதினப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆவார். இவர் கடந்த ஆண்டு மகளிருக்கான ஒருதினப் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நபர் என்ற சாதனையை நிகழ்த்தினார். கடந்த மே மாதம் தென்னாப்பிரிக்காவின் குவாங்ரங்குலர் தொடரின் போது, ஆஸ்திரேலியாவின் கேட்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கையை இவர் கடந்தார்.

2002 ல் தனது முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்கேற்ற கோஸ்வாமி 169 போட்டிகளில் 21.77 சராசரியில் 203 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 16.62 சராசரியில் 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

T Aravind:

This website uses cookies.