50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ, ஆனால் ipl போட்டிகளுக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்த போட்டிகள் வருடா வருடம் நடைபெறும். தற்போது 10 வருடங்கள் முடிந்த நிலையில், இந்த வருடத்திற்கான புதிய போட்டியாளர்களை ஏலம் எடுக்க அவரவர் போட்டி போடுகின்றனர்.

பெரும் பணக்காரர்கள் மட்டும் இன்றி,பாலிவுட்டின் பிரபலங்களும் வீரர்களை ஏலம் எடுக்க ஆர்வமாக வந்தனர். இந்த ஏலத்தில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது கொல்கத்தா அணிக்காக ஏலம் எடுக்க வந்த 16 வயது பெண் தான். இந்த பெண் யார் என்ற விவரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இவர் யார் என்றால்..? இவர் பெயர் ஜான்வி. இவர் வேறு யாருமில்லை பிரபல பாலிவுட் நடிகை ஜுகி சாவ்லாவின் மகள் தான், ஜான்வி தற்போது இங்கிலாந்தில் படித்து வருகிறாராம். இவர் தந்தை பெயர் ஜே மேத்தா. இவர்இதான் கொல்கத்தா அணியின் தலைவர் . ஜான்விக்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதன் காரணமாக இவர் ஏலம் எடுக்க வந்ததாக கூறப்படுகிறது.
Chris Lynn வீரரை இவர் ஏலத்தில் எடுத்திருக்கிறார். இவர் அதிக சிக்சர்களை அடிக்க கூடிய ஆட்டக்காரர். இவர் விளையாடுவதை பார்க்க ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார்.