விராட் கோலியால் தொட முடியாத சாதனையை அசால்டாக காலி செய்த ஜோ ரூட்! 1

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் குறைந்த வயதில் 7 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் படைத்துள்ளார்.

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன் எடுத்து இருந்தது.

ஜோ ரூட் 57 ரன்னும், ஜோ பேர்ன்ஸ் 47 ரன்னும் எடுத்தனர். பட்லர் 64 ரன்னும், லீச் 10 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மிட்செல் மார்ஷ் 4 விக்கெட்டும், கம்மின்ஸ், ஹசில்வுட் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.விராட் கோலியால் தொட முடியாத சாதனையை அசால்டாக காலி செய்த ஜோ ரூட்! 2

இங்கிலாந்து கேப்டன் 35 ரன் எடுத்து இருந்தபோது டெஸ்டில் 7 ஆயிரம் ரன்னை தொட்டார். அவர் 85 டெஸ்டில் 157 இன்னிங்சில் 7022 ரன் எடுத்து உள்ளார். இதில் 16 சதமும், 44 அரை சதமும் அடங்கும். அதிகபட்சமாக 254 ரன் குவித்துள்ளார். 7 ஆயிரம் ரன்னை எடுத்த 12-வது இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றார்.

குறைந்த இன்னிங்சில் 7 ஆயிரம் ரன்னை எடுத்த 4-வது இங்கிலாந்து வீரர் ஆவார். ஹேமந்த் 131 இன்னிங்சிலும், பீட்டர்சன் 150 இன்னிங்சிலும், அலைஸ்டர் குக் 151 இன்னிங்சிலும் 7 ஆயிரம் ரன்னை தொட்டு இருந்தனர்.

மேலும் குறைந்த வயதில் 7 ஆயிரம் ரன்னை எடுத்த 3-வது சர்வதேச வீரர் ஜோ ரூட் ஆவார். அவர் 28 வயது 256 நாட்களில் இந்த ரன்னை எடுத்தார். குக் 27 வயது 346 நாட்களிலும், தெண்டுல்கர் 28 வயது 193 நாட்களிலும் 7 ஆயிரம் ரன்னை தொட்டனர்.விராட் கோலியால் தொட முடியாத சாதனையை அசால்டாக காலி செய்த ஜோ ரூட்! 3

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான அஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. ஜோ பேர்ன்ஸ் (47), ஜோ ரூட் (57) சிறப்பாக ஆடிய போதிலும், மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள்.

 

ஆனால், பட்லர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடிக்க, நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்திருந்தது. பட்லர் 64 ரன்களுடனும், லீச் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஜோஸ் பட்லர்

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பட்லர் மேலும் 6 ரன்கள் எடுத்து 70 ரன்னில் ஆட்டமிழந்தார். லீச் 21 ரன்னில் ஆட்டமிழக்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 87.1 ஓவரில் 294 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் மார்ஷ் ஐந்து விக்கெட்டும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஹசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *