ஜோப்ரா ஆர்ச்சர் அபார பந்துவீச்சு: ஆஸ்திரேலியா 225க்கு ஆல் அவுட் 1

லண்டன் ஓவல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 225 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. ஜோப்ரா ஆர்ச்சர் 6 விக்கெட் வீழ்த்தினார்.

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான அஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

ஜோப்ரா ஆர்ச்சர் அபார பந்துவீச்சு: ஆஸ்திரேலியா 225க்கு ஆல் அவுட் 2
LONDON, ENGLAND – SEPTEMBER 13: Mitch Marsh of Australia celebrates his 5 wicket haul after bowling out Jack Leach of England during day two of the 5th Specsavers Ashes Test match between England and Australia at The Kia Oval on September 13, 2019 in London, England. (Photo by Julian Finney/Getty Images)

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. ஜோ பேர்ன்ஸ் (47), ஜோ ரூட் (57) சிறப்பாக ஆடினர். மற்றவர்கள் சொதப்பினர். இறுதியில், பட்லர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பட்லர் மேலும் 6 ரன்கள் எடுத்து 70 ரன்னில் ஆட்டமிழந்தார். லீச் 21 ரன்னில் ஆட்டமிழக்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 87.1 ஓவரில் 294 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

ஜோப்ரா ஆர்ச்சர் அபார பந்துவீச்சு: ஆஸ்திரேலியா 225க்கு ஆல் அவுட் 3
LONDON, ENGLAND – SEPTEMBER 13: Jofra Archer of England raises the ball aloft after claiming his fifth wicket of the innings, the wicket of Nathan Lyon of Australia during day two of the 5th Specsavers Ashes Test at The Kia Oval on September 13, 2019 in London, England. (Photo by Ryan Pierse/Getty Images)

ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் மார்ஷ் 5 விக்கெட்டும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஹசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அதன்பின், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் லபுஸ்சக்னே 48 ரன்னில் அவுட்டானார். இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஸ்டீவ் ஸ்மித் அரை சதமடித்தார். அவர் 80 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் நாதன் லயன் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஜோப்ரா ஆர்ச்சர் அபார பந்துவீச்சு: ஆஸ்திரேலியா 225க்கு ஆல் அவுட் 4
LONDON, ENGLAND – SEPTEMBER 13: Chris Woakes of England celebrates dismissing Steve Smith of Australia during day two of the 5th Specsavers Ashes Test between England and Australia at The Kia Oval on September 13, 2019 in London, England. (Photo by Jordan Mansfield/Getty Images for Surrey CCC)

இறுதியில், ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து அணி சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 6 விக்கெட்டும், சாம் கர்ரன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 69 ரன்கள் முன்னிலை வகிக்க இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *