ஆஸ்திரேலிய வகப்பந்து வீச்சாளர் ஜான் ஹேஸ்டிங்ஸ் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து தனது ஒய்வை அறிவித்துள்ளார். இதிலிருந்து அவர் ஆஸ்திரேலியா மற்றும் உள்ளூர் அணிகளுக்காக ஒருநாள் மற்றும் முதல் தரப் போட்டிகளில் பங்கேற்க்க மட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்க்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் முதல் தரப் போட்டிகளில் ஆடியவர் ஜான் ஹேஸ்டிங்ஸ். 31 வயதான அவர் முதுகில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான காயம் மற்றும் வலியினால் தொடர்ந்து லாங்கர் ஃபார்மட் கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியாது என முடிவெடுத்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
இது வரை ஆஸ்திரேலியாவிற்க்காக 1 டெஸ்ட் போட்டி 29 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகள் விளையாடியுள்ளார். இந்த வருடம் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடரிலும் ஆஸ்திரேலிய அணியில் பங்கு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது டி20 போட்டிகள் மற்றும் தொடர்களில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த முடிவினை அறிவித்து அவர் கூறியதாவது,
இன்னம் பல வருடங்கள் கிரிக்கெட் விளையாடும் திண்ணம் என்னுள் உள்ளது. தற்போது பிக் பாஷ் லீக்கின் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாட ஆர்வமாக உள்ளேன்.
பல காயங்களால் அவதிப்பட்டுள்ளேன் அதனலேயே என்னாள் தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் ஆட முடியவில்லை. விக்டோரியா அணிக்கு நான் இந்த தருணத்தில் நன்றியச் செலுத்துகிறேன்.
உள்ளூர் போட்டிகளில் 75 முதல் தரப் போட்டிகளில் ஆடியுள்ளார் ஜான் ஹேஸ்டிங்ஸ். அதில் 11 அரை சதங்கல் அடித்துள்ளார். அதிகபட்சகாம 93 எடுத்துள்ளார். மேலும், 239 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.
இதில் 7 முறை 4 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
மேலும், 113 ஒருநாள் லிஸ்ட் ஏ (சேவதேச ஒருநாள் போட்டிகள் சேர்த்து) போட்டிகளில் ஆடியுள்ள அவர் 179 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருடைய சிறந்த பந்து வீச்சு 45 ரன்னிற்கு 6 விக்கெட் எடுத்ததே ஆகும்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில் நாளை (7-ந்தேதி) டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது
இந்நிலையில் டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஆஷிஷ் நெஹ்ரா, தினேஷ் கார்த்திக் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டி20 போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் விவரம் பின்வருமாறு:-
இந்திய அணி:
1. விராட் கோலி(கேப்டன்), 2. ரோஹித் சர்மா, 3. ஷிகர் தவான், 4. கே.எல்.ராகுல், 5. மணிஷ் பாண்டே, 6. கேதார் ஜாதவ், 7. தினேஷ் கார்த்திக், 8. எம்.எஸ்.டோனி, 9. ஹர்திக் பாண்டியா, 10. குல்தீப் யாதவ், 11. யுஸ்வேந்திர சஹல், 12. ஜஸ்பிரித் பும்ரா, 13. புவனேஷ்வர் குமார், 14. ஆஷிஷ் நெஹ்ரா, 15. அக்சர் பட்டேல்.
ஆஸ்திரேலிய அணி:
1. ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), 2. டேவிட் வார்னர், 3. ஜேசன் பெக்ரெண்டார்ஃப், 4. டான் கிறிஸ்டியன், 5. நாதன் கௌல்டர்- நீல், 6. பேட்ரிக் கம்மின்ஸ், 7. ஆரோன் ஃபிஞ்ச், 8. டிராவிஸ் கெட், 9. மோசிஸ் ஹென்றிக்ஸ் 10. கிளென் மேக்ஸ்வெல், 11. டிம் பெயின், 12. கேன் ரிச்சர்ட்சன், 13. ஆடம் ஸம்பா