இந்திய அணியின் பீல்டிங் கோச்சாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் நியமனம்? வெளியான புதிய தகவக்! 1

இந்திய அணியின் பீல்டிங் கோச்சருக்கான நேர்காணலில் தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் கலந்து கொண்டார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது பந்து வீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்களை தேர்வு செய்வதற்கான வேலை நடைபெற்று வருகிறது.

தென்ஆப்பிரிக்கா அணியின் தலைசிறந்த வீரரான ஜான்டி ரோட்ஸ் பீல்டிங் கோச்சர் பணிக்கு விண்ணப்பம் செய்திருந்தார். அவரை தேர்வுக்குழு ஸ்கைப் மூலம் நேர்காணல் நடத்தியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஜூலியன் பவுன்டைன், அபேய் சர்மா ஆகியோர் நேர்காணலில் கலந்து கொண்டனர்.

மேலும், பேட்டிங் பயிற்சியாளருக்கான நேர்காணலில் விக்ரம் ரத்தோர், பிரவின் அம்ரே ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் தற்போதுள்ள சஞ்சய் பாங்கருக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய அணியின் பீல்டிங் கோச்சாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் நியமனம்? வெளியான புதிய தகவக்! 2

தற்போது சஞ்சய் பாங்கர் பேட்டிங் பயிற்சியாளராகவும், பரத் அருண் பந்து வீச்சு பயிற்சியாளராகவும், ஆர் ஸ்ரீதர் பீல்டிங் கோச்சராகவும் உள்ளனர்

இந்நீலையில், கிரிக்கெட் பற்றிய அறிவு, திறமை, சாதனை அடிப்படையில் ரவிசாஸ்திரி தேர்வு செய்யப்பட்டதாகவும், பயிற்சியாளரை தேர்வு செய்யும் குழுவில் உள்ள அனைவரும் ஒருமித்த கருத்துடன் ரவிசாஸ்திரியை தேர்வு செய்ததாக கபில்தேவ் தெரிவித்தார்.

2021ம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை வரை ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பதவியேற்ற பிறகு, இந்திய அணி ஐ.சி.சி டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் முதலிடம், ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது என சிறப்பாகவே செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.இந்திய அணியின் பீல்டிங் கோச்சாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் நியமனம்? வெளியான புதிய தகவக்! 3

ஆனால் உலகக் கோப்பை தோல்வியை அடுத்து அவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இருந்த போதும், இந்திய கேப்டன் விராட் கோலியின், ஆதரவு ரவி சாஸ்திரிக்கே இருந்தது. கோலியின் கருத்தும், ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட முக்கியக் காரணம் என்பது மறுப்பதற்கில்லை.

நேர்காணலுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தேர்வுக் குழு, பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் அறிவித்தது. அணியின் சாதக பாதகங்களை நன்கு அறிந்தவர் என்ற அடிப்படையில் ரவி சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் குழுவினர் தெரிவித்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *