உலககோப்பை வெளியேற்றத்திற்கு நாங்களே பொருப்பு: மக்களிடம் மன்னிப்பு கோரிய டுமினி 1

உலகக்கோப்பை போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது வெட்கமாக இருக்கிறது. எங்களை மன்னித்து விடுங்கள் என்று தென் ஆப்பரிக்க மக்களிடம் அந்நாட்டு வீரர் டுமினி உருக்கமாகப் பேசியுள்ளார்.

உலகக்கோப்பையில் பலம்வாய்ந்த அணியாகக் கருதப்பட்ட தென் ஆப்பிரிக்கா அடுத்தடுத்த தோல்விகளால் தொடரில் இருந்தே வெளியேறியது. இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள அந்த அணி 6 முறை தோல்வி அடைந்துள்ளது. இதில் ஆப்கானிஸ்தானை மட்டும் வென்றுள்ளது.

இன்னும் 2 போட்டிகள் இருக்கும் நிலையில் இன்றைய ஆட்டத்தில் இலங்கையுடன் மோதுகிறது தென் ஆப்பிரிக்கா.

இந்த இரு ஆட்டங்களிலும் தென் ஆப்பிரிக்க அணி வென்றாலும், தோற்றாலும் அந்த அணிக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை.உலககோப்பை வெளியேற்றத்திற்கு நாங்களே பொருப்பு: மக்களிடம் மன்னிப்பு கோரிய டுமினி 2

இந்த உலகக்கோப்பை போட்டியுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து தென் ஆப்பிரிக்க அணி வீரர் டுமினி ஓய்வு பெற உள்ளார். இந்த சூழலில் தென் ஆப்பிரிக்க மக்களிடம் மன்னிப்பு கேட்டு அவர் உருக்கமாக நேற்று பேசியுள்ளார்.

இது தொடர்பாக டுமினி பேசியதாவது:

”இந்த உலகக்கோப்பை போட்டியில் நாங்கள் மோசமாகச் செயல்பட்டு இருக்கிறோம். இந்த தோல்விக்கும், மோசமான செயல்பாட்டுக்கும் நாங்கள் உண்மையிலேயே ரசிகர்களிடமும் மக்களிடமும் மன்னிப்பு கோருகிறோம். எங்கள் நாட்டு மக்களை தலைகுனிய வைத்துவிட்டதை நினைத்து வெட்கப்படுகிறோம்.

உங்கள் நாட்டுக்காக நீங்கள் விளையாட வந்தால் அது உண்மையில் பெருமையான நிகழ்வாக இருக்கும். 6 முதல் 7 கோடி மக்களின் பிரதிநிதியாக வருகிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அது பெருமையான தருணம்.உலககோப்பை வெளியேற்றத்திற்கு நாங்களே பொருப்பு: மக்களிடம் மன்னிப்பு கோரிய டுமினி 3

கோடிக்கணக்கான மக்களின் பிரதிநிதியாக விளையாட வந்து, இதுபோன்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அது எங்களுக்கும், எங்களுக்கும் வெட்கக்கேடானது. தலைகுனிவானது.

கடந்த போட்டிகளில் தோல்விக்கு வீரர்கள் மட்டுமல்ல, பயிற்சியாளர் மட்டுமல்ல, அனைவரும் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும். எங்களின் செயல்பாடுகள், தோல்விகள் அனைத்தையும் தாங்கிக்கொண்டு விளையாடுவது எப்போதும் கடினமானது. தோல்விக்கு நாங்கள் முதலில் பொறுப்பேற்பது முக்கியமானது. தோல்விக்கான காரணங்கள் என்ன, என்பதை அனைவரும் சேர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

உலககோப்பை வெளியேற்றத்திற்கு நாங்களே பொருப்பு: மக்களிடம் மன்னிப்பு கோரிய டுமினி 4
South Africa’s David Miller during the ICC Cricket World Cup group stage match at Lord’s, London. (Photo by Nigel French/PA Images via Getty Images)

எங்களுக்கு மக்கள் அனைத்து வகையிலும் ஆதரவு அளித்தார்கள். தேவையான போதெல்லாம், மிகப்பெரிய போட்டியில் பங்கேற்கும் போதெல்லாம் ஆதரவு அளித்தார்கள். நாங்கள்தான் அதைப் பெறத் தவறிவிட்டோம். மன்னித்துவிடுங்கள்”.

இவ்வாறு டுமினி பேசினார்.

இதற்கிடையே தென் ஆப்பிரிக்க அணியின் மோசமான தோல்வியையடுத்து, அடுத்த சில வாரங்களில் அணியில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது. பயிற்சியாளர், கேப்டன், வீரர்கள் அளவில் பல மாற்றங்கள் செய்யப்படும் என்று தென் ஆப்பிரிக்க வாரியத் தலைவர் கிறிஸ் நென்ஜானி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *