சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கிளப் போட்டியில் ஆல் ரவுண்டராக களக்கினார்.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர். சச்சினை போல்வே அவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். ஆனால் சச்சினை போல் அவரது மகன் இல்லை. அர்ஜூன் டெண்டுல்கர் இடது கை பேட்ஸ்மேன். வேகப்பந்து வீச்சாளரும் கூட.
இந்திய கிளப் அணிக்கும் ஹாங்காங் கிளப் அணிக்கும் இடையே சிட்னி மைதானத்தில் டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 27 பந்துகளில் 48 ரன்கள் எடுத்ததோடு, 4 விக்கெட்டுகளையும் சாய்த்தார். சச்சின் மகன் ஆல் ரவுண்டராக அசத்தியது மைதானத்தில் உள்ளவர்களுக்கு விருந்தாக அமைந்தது.
பின்னர் பேசிய அர்ஜூன், “நான் தற்போது வலிமையாக வளர்ந்து வருகிறேன். சின்ன வயதில் இருந்தே வேகப்பந்து வீச்சாளராக வர வேண்டும் என்பதே எனது ஆசை. இந்திய அணியில் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாததால் விரைவில் அணியில் இடம்பிடிப்பேன்” என்றார்.

இந்த ஜூனியர் சச்சினுக்கு யார் ரோல் மாடல் தெரியுமா? ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிச்சேல் ஸ்டார்க் மற்றும் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தான் இவருக்கு ரோல் மாடல்கள். இவர்களை பார்த்து தான் எப்படி விளையாட வேண்டும் எப்படி பிரசரில் ஆட வேண்டும் என கற்றுக்கொண்டு வருகிறாராம்