மும்பையில் உள்ள பிரபல வணிக வளாகம் ஒன்றில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மனைவி ஆண்ட்ரியா ஹீவைட் மற்றும் பிரபல பாலிவுட் பாடகர் அங்கித் திவாரியின் தந்தை ராஜ் குமார் திவாரிக்கும் இடையே பாலியல் சீண்டல் தொடர்பாக சண்டை ஏற்பட்டது. இதில் வினோத் காம்ப்ளியின் மனைவி அந்த பாலிவுட் பாடகரின் தந்தையை அடித்துள்ளார்.
பிரபல பாடகர் அன்கித் திவாரியின் தந்தையை கிரிக்கெட் வீரர் வினோத் காம்பிளியின் மனைவி தாக்கியதால் பரபரப்பு!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வினோத் காம்ப்ளியின் மனைவியிடம் பாலிவுட் இசையமைப்பாளர் அங்கீத் சர்மாவின் தந்தை தவறாக நடந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வினோத் காம்ப்ளி மற்றும் அவரின் மனைவி ஆண்ட்ரியாவும் மும்பையில் உள்ள இன்ரோட் மாலுக்கு சென்றுள்ளார். அப்போது, ஆண்ட்ரியாவுடன் முதியவர் ஒருவர் தவறாக நடக்க முயன்றுள்ளார். ஆண்ட்ரியா மீது தவறாக கை வைக்க முயன்றதாக போலீசில் கூறப்பட்டுள்ளது.
இதனால் ஆண்ட்ரியா அதே இடத்தில் அந்த முதியவரை அடித்துள்ளார். அதே சமயத்தில் எல்லோருக்கு முன் மோசமாக திட்டிவிட்டு சென்றுள்ளார். சில நிமிடம் கழித்து அந்த முதியவரின் மகன் அன்கூர் திவாரி அந்த மாலிற்கு வந்து ஆண்ட்ரியாவிடமும், வினோத்திடமும் வாய் சண்டை போட்டுள்ளார். அன்கூர் திவாரி பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் அன்கித் திவாரியின் சகோதரர்.
மாலில் அன்கூர் திவாரிக்கும் வினோத்திற்கும் இடையில் சிறிய கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அன்கூர் திவாரியும் அவரது தந்தை தாக்கப்பட்டது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
Yesterday, a man brushed himself against me & passed an inappropriate comment at me. What I did afterwards was right. Soon after his sons came & started arguing with me, later we filed an FIR: Andrea Hewitt, Vinod Kambli's wife on complaint against singer Ankit Tiwari's father pic.twitter.com/eB6xWRjfyH
— ANI (@ANI) July 2, 2018
இது குறித்து வினோத் காம்ப்ளி மும்பை மிரர் பத்திரிகைக்குத் தெரிவித்த போது; அந்த மூன்று பேரும் எனது மனைவியைத் தாக்க முயன்றனர். விளையாட்டு அரங்கில் நான் “என் மனைவியின் கையை பிடித்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர், வேண்டுமென்றே அவரது கையை முத்தமிட்டார், அவள் அவரைக் கைப்பற்றிய போது, அவளை தள்ளிவிட்டார்,” என்று அவர் கூறினார்.
Yesterday, a woman accused me of touching her and she hit me. I told my sons about the incident. The woman & her husband Vinod Kambli started to fight with us. They should apologise to us publicly, we will pursue the case further: Rajendra Tiwari, Father of singer Ankit Tiwari pic.twitter.com/8aiLuj1dMj
— ANI (@ANI) July 2, 2018
இதை தொடர்ந்து, நாங்கள் சிறிது நேரம் கழித்து உணவு உண்ணும் இடத்துக்கு சென்றோம் அப்போது, இரண்டு ஆண்கள் வந்த இரண்டு ஆண்களும் என மனைவியை தாக்க முயன்றனர். நான் அவர்களை பின்வாங்க சொன்ன போது, நாங்கள் யார் என்று உனக்கு தெரிய வில்லையா? என்று கூறினார்.
இதை தொடர்ந்து, வர்கள் மீது புகார் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.