உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் இவர்தான், விராட் கோலி இல்லை: கேன் வில்லியம்சன் ஓப்பன் டாக் 1

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் யார் என்பதை தேர்வு செய்துள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன். இவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடுகிறார். இதற்கிடையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்பாடு செய்திருந்த இன்ஸ்டாகிராம் நேரலையில், அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னருடன், வில்லியம்சன் உரையாடினார்.

உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் இவர்தான், விராட் கோலி இல்லை: கேன் வில்லியம்சன் ஓப்பன் டாக் 2
India’s cricket team captain Virat Kohli celebrates the dismissal of West Indies’ Nicholas Pooran (not pictured) during the third T20 international cricket match of a three-match series between India and West Indies at the Wankhede Stadium in Mumbai on December 11, 2019

சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஷார்ப் பிரைன் கொண்ட வீரராக கேன் வில்லியம்சன் அறியப்படுகிறார். கிரிக்கெட் களத்தில் நல்ல குணம் கொண்ட வீரர்களில் ஒருவராகவும் வில்லியம்சன் அறியப்படுகிறார். இதற்கு கடந்த ஆண்டு உலகக்கோப்பை ஃபைனல் போட்டி மிகச்சிறந்த உதாரணம். இவரின் உண்மையான விளையாட்டு உணர்வும், மெகா நெருக்கடி தருணத்தில் சாந்த சொரூபியாகவும் வில்லியம்சன் காட்சியளித்தார்.

 

நேரலையில் பேசிய வில்லியம்சன் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனை தேர்வு செய்தார். அதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸும் இடையே யாரை தேர்வு செய்வது என்பதில் குழப்பமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் இவர்தான், விராட் கோலி இல்லை: கேன் வில்லியம்சன் ஓப்பன் டாக் 3

இதுகுறித்து வில்லியம்சன் கூறுகையில்,“இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் இருவரில் யாரை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் உள்ளது டிவிலியர்ஸ் போன்ற ஒரு வீரர், தற்போது உள்ளூர் கிரிக்கெட் மட்டுமே விளையாடுகிறார். ஆனால் ஆசிர்வதிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் டிவிலியர்ஸ் முதலிடத்தில் உள்ளார். எனது காலத்தின் ஸ்பெஷல் வீரர் டிவிலியர்ஸ்.

அதே நேரம் சில தரமான வீரர்களும் உள்ளனர். அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் கோலி மிகச்சிறந்த வீரர். சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற பசி அவரிடம் உள்ளது. கோலியின் ஆட்டத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதேநேரம் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளவும் நிறைய விஷயங்கள் உள்ளது. அவர் எங்கயோ உச்சத்தில் இருக்கிறார்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *