சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் தோல்வி அடைந்ததை அடுத்து அடுத்தச் சுற்றுக்கான வாய்ப்பை, டெல்லி டேர்டெவில்ஸ் அணி இழந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், டெல்லி டேர்டெவில்ஸ் – ஐதராபாத் அணிகள் நேற்று மோதின. ஐதராபாத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. டெல்லி அணியில் அதிகப்பட்சமாக பிருத்வி ஷா 36 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 44 ரன்களும் கடைசி கட்டத்தில் தமிழக வீரர் விஜய சங்கர் 13 பந்துகளில் 23 எடுத்தனர். ஐதராபாத் சார்பில் சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் கவுல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

பின்னா் களம் இறங்கிய ஐதராபாத் அணியின் ஷிகர் தவானும், அலெக்ஸ் ஹேல்சும் அதிரடியாக ஆடினர். ஹேல்ஸ் 31 பந்தில் 45 ரன்களும் தவான் 30 பந்தில் 33 ரன்களும் எடுத்து அமித் மிஸ்ரா சுழலில் அவுட் ஆயினர். அடுத்து அந்த கேப்டன் வில்லியம்சனும் (32) யூசுப் பதானும் (27) அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். ஐதராபாத் அணி 164 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. ஏழாவது தோல்வியை சந்தித்துள்ள டெல்லி அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

பின்னா் கடைசி ஓவா்களில் டெல்லி அணியின் பந்து வீச்சாளா்களை திணறடித்தனா். பின்னா் பிளன்கெட் பந்தில் பாண்டே 21 (17பந்துகள்) ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். இவரை தொடா்ந்து அதிரடி மன்னன் யூசப் பதான் களத்தில் பிரேவேசித்து கடைசி ஓவா்களில் ரசிகா்களுக்கு வாணவேடிக்கை காட்டினாா். இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 164 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.