அரியானாவில் தொடங்கப்பட உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே விளையாட்டுக்கு என தனி பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அரியானா மாநிலத்தில் இளைஞர்களிடையே விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டுத் துறைக்கென தனி பல்கலைகழகம் நிறுவுவதற்கான அனுமதியை கடந்த ஜூலை மாதம் அம்மாநில அரசு வழங்கியது.
1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனாக கபில் தேவ் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அனில் விஜ் ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில், ‘‘ஹரியானா விளையாட்டு பல்கலை.,யின் முதல் வேந்தராக கபில் தேவ் நியமிக்கப்படுகிறார்,’’ என, தெரிவித்திருந்தார்.
முன்னதாக,
புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் முன்னாள் வீரர் அன்ஷூமான் கெய்க்வாட், முன்னாள் வீராங்கனை சாந்தா ரங்கசாமி ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி உருவாக்கப்பட்டது.

தற்போது வெஸ்ட் இண்டீசில் இருக்கும் ரவிசாஸ்திரி மற்றும் ஆஸ்திரேலியாவின் டாம் மூடி ஆகியோரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேர்காணல் நடத்தப்பட்டது. பயிற்சியாளர் அனுபவம், பயிற்சி தத்துவம், பயிற்சியாளராக சாதனைகள், தகவல் தொடர்பு, நவீன கால பயிற்சி முறைகள் என்று 5 வகையாக பிரித்து தேர்வு குழுவினர் தனித்தனியாக மதிப்பெண் வழங்கினர்.
இதன் முடிவில் கேப்டன் விராட் கோலியின் ஆதரவு பெற்ற, வீரர்களுடன் நல்ல புரிந்துணர்வு கொண்டுள்ள ரவிசாஸ்திரியை மீண்டும் பயிற்சியாளராக நியமிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.