புதிய அணிக்கு ஒப்பந்தம் ஆன பாப் டு ப்லெசிஸ்! தோனியை மீறி நடந்த காரியம்! சிஎஸ்கே அவ்வளவு தானா? 1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த நட்சத்திர அதிரடி வீரர் பாப் டு ப்லெசிஸ் தற்போது இங்கிலாந்தில் உள்ள டி20 பிளாஸ்ட் தொடரில் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான அங்கமாக இருந்து வருகிறார் பாப் டு ப்லெசிஸ். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தோனி இருக்கும் அணிகளில் விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு வருடம் தடைகாலம் விதிக்கப்பட்ட போது, தோனி கேப்டனாக கிட்ட ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடியவர் இவர்.

இந்நிலையில் உலக கோப்பை தொடரின் தோல்விக்கு பின்னர் தென் ஆப்பிரிக்க அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தாண்டி தற்போது இங்கிலாந்தில் நடக்கும் டி20 பிளாஸ்ட் 20 ஓவர் கோப்பை தொடரில் கென்ட் அணிக்காக ஒப்பந்தம் ஆகியுள்ளார்புதிய அணிக்கு ஒப்பந்தம் ஆன பாப் டு ப்லெசிஸ்! தோனியை மீறி நடந்த காரியம்! சிஎஸ்கே அவ்வளவு தானா? 2

இந்த ஒப்பந்தம் வேறு எந்த ஒரு வீரரையும் அணியையும் கலந்தாலோசிக்காமல் ஏற்படுத்தப்பட்டது என்று தெரிகிறது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திரசிங் தோனியை கலந்தாலோசிக்காமல் அந்த அணிக்காக ஒப்பந்தம் ஆகி உள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

ஒருவேளை ஐபிஎல் தொடரின்போது இவர் விளையாட முடியாமல் போனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அது ஒரு பெரிய இழப்பை ஏற்ப்படுத்தும். சொல்லப்போனால் டி20 பிளாஸ்ட் தொடர், ஐபிஎல் தொடரின்போது விளையாடபடமாட்டாது. இதனால் அதனை பற்றி யோசிக்க தேவையில்லை.புதிய அணிக்கு ஒப்பந்தம் ஆன பாப் டு ப்லெசிஸ்! தோனியை மீறி நடந்த காரியம்! சிஎஸ்கே அவ்வளவு தானா? 3

இருந்தாலும் இங்கிலாந்தில் உள்ள டி20 தொடரில் ஆடிவிட்டு ஐபிஎல் தொடரில் ஆடும் போது அவருக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். மேலும், உடல் சோர்வடைந்து விடும் அந்த நேரத்தில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முழுவதும் ஒத்துழைக்க முடியாமல் போகக்கூடும்.

இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகளிடமோ அல்லது தோனியிடமோ கலந்தாலோசித்து விட்டு இந்த முடிவை எடுத்து இருக்கலாம் எனவும் ரசிகர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில் கென்ட் அணிக்காக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.புதிய அணிக்கு ஒப்பந்தம் ஆன பாப் டு ப்லெசிஸ்! தோனியை மீறி நடந்த காரியம்! சிஎஸ்கே அவ்வளவு தானா? 4

அந்த அணியின் கடைசி இரண்டு குரூப் போட்டிகளுக்காக களமிறங்குவார் என்று தெரிகிறது. எது எப்படி இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்து ஆடும் போது முழு உடல் தகுதியுடனும், முழுமனதோடும் அந்த ஆடினால் போதும் என்று கூறுகின்றனர் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *