92011 ஐபிஎல் தொடரில் கொச்சி கிரிக்கெட் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான கொச்சி டஸ்கர்ஸ் அணி களமிறங்கியது.2011–ம் ஆண்டு ஐ.பி.எல்.
சீசனில் மஹேலா ஜெயவர்த்தனே தலைமையில் களம் இறங்கிய கொச்சி அணி 14 ஆட்டங்களில் விளையாடி 6–ல் வெற்றியும், 8–ல் தோல்வியும் தழுவியது.முதல் சீசனில் 8-ம் இடத்தில் முடிந்தது அந்த அணி. வங்கி உத்தரவாதத் தொகையை செலுத்தாததால் வீரர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது பிசிசிஐ.துரதிர்ஷ்டவசமாக அந்த ஒரு சீசனுடன் கொச்சி டஸ்கர்ஸ் அணி, ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாக நீக்கப்பட்டு விட்டது.
கொச்சி டஸ்கர்ஸ் அணியை 5 நிறுவனங்கள் இணைந்து வாங்கி இருந்தது. அதை யார் நிர்வகிப்பது என்பதில் உரிமையாளர்கள் இடையே அவ்வப்போது பிரச்சினை எழுந்தது. இதையடுத்து புதிதாக வங்கி உத்தரவாதத் தொகையை செலுத்த கொச்சி அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் 6 மாத கால கெடு விதித்தது. அதை செய்ய தவறியதால் கொச்சி அணி, ஐ.பி.எல். அமைப்பில் இருந்து நிரந்தரமாக கழற்றி விடப்பட்டது
பிரெண்டன் மெக்கல்லம், ரவீந்திர ஜடேஜா, பார்த்திவ் படேல், முத்தையா முரளிதரன், பிராட் ஹாட்ஜ், லஷ்மண் ஆகியோர் இந்த அணியில் இடம் பெற்ற நட்ச்ச்த்திர வீரர்கள் ஆவர்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவை எதிர்த்து கொச்சி அணி அப்பீல் செய்தது. இந்த விவகாரம் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.சி. லஹோத்தி தலைமையிலான நடுவர் மன்றத்தில் விசாரிக்கப்பட்டது.இந்நிலையில் கொச்சி டஸ்கர்ஸ் அணியின் ஒப்பந்தத்தை ரத்து செய்ததால் கோர்ட் நியமித்த தீர்ப்பாயம் ரூ550 கோடி இழப்பீடாக கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு அளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் கொச்சி டஸ்க்கர்ஸ் அணி தன்னை மீண்டும் ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்டு பங்கு பெற கேரள நீதிமன்றத்தை அனுகியது. அதில்
இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் எங்களுக்கு வட்டியுடன் சேர்த்து 1200 கோடி மீதம் தர வேண்டி இருக்கிறது. இந்த தொகையை 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தராமல் இலுத்தடிக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் சட்டத்தை மீறுவதுடன் , கேரள மாநிலத்தின் அரசிற்க்கு பெரும் வரி நஸ்டத்தை ஏற்படுத்துகிறது, இதனால் தான் தற்போது நாங்கள் கேரள உயர் நீதி மன்றத்தை அனுகியுள்ளோம். எங்களுக்கு நீதி கிடைப்பதுடன் நாங்க 2018 ஆம் ஆண்டில் இருந்து ஐபிஎல் தொடரில் கல்ந்து பங்கு பெற அனுமதி பெற்றுத் தர வேண்டுகிறோம்.
ஆகஸ்ட் 4 ஆம் தேதி விசாரணைக்கு வந்த இந்த மனுவை நிராகரித்த நீதிபதி,
கிரிக்கெட் மற்றும் ஐபில் தொடர்பான ஒழுங்கு முறை விதிமுறைகளை நிர்ணயம் செய்ய குழு ஒன்று ஏற்க்கனேவே அமைக்கப் பட்டுள்ளது, அந்த குழு ஓய்வு பெற்ற நீதிபதி லோதா வின் தலைமையில் செயல்படுகிறது. அந்த குழு இன்னும் செயல்பாட்டில் தான் உள்ளது. உங்களது அனைத்து ஐபிஎல் தொடர்பான பிரச்சனைகளுக்கும் தீர்வு லோதா கமிட்டியின் மூலம் களையப்படும் என்று கொச்சி டஸ்க்கர்ஸ் அணியின் குழுவை லோதா கமிட்டியினை அனுகுமாறு அறிவுருத்தியிள்ளனர்.நாங்கள் அந்த பிரச்சனையில் தலையிட முடியாது எனவும் தெரிகித்துள்ளனர்.