இந்திய ரசிகர்களின் ஒரே ஒரு நம்பிக்கையையும் தகர்க்கிறது தென் ஆப்ரிக்கா..?

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து கேஷவ் மஹாராஜை நீக்க தென் ஆப்ரிக்கா அணி திட்டமிட்டுள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேப்டவுனில் நடைபெற்ற முதல் போட்டியில், வெறும் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை, தென் ஆப்ரிக்கா அணி தனது மிரட்டும் பந்துவீச்சு மூலம் தகர்த்தெறிந்து 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி  பெற்றது.

LONDON, ENGLAND – JULY 27: Vernon Philander of South Africa during day one of the 3rd Investec test between England and South Africa at The Kia Oval on July 27, 2017 in London, England. (Photo by Visionhaus/Corbis via Getty Images)

இந்த போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியின் வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர்களே மிக முக்கிய காரணமாக அமைந்தனர். குறிப்பாக பிலேண்டர் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாம் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றி மிரள வைத்தார்.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் அனைத்து தென் ஆப்ரிக்காவின் அனைத்து பந்துவீச்சாளர்களும் மிரட்டிய நிலையில், கேசவ் மஹராத் என்ற இடது கை ஸ்பின் பவுலரின் பந்தை மட்டும் பாண்டியா சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டார்.

இதனால் கேசவ் மஹராஜே நிறைய ஓவர்கள் போட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர், தங்களது என்னத்தை மீம்ஸ் மூலமும் இந்திய ரசிகர்கள் வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் இந்திய ரசிகர்களுக்கு இருந்த ஒரே நம்பிக்கையான கேசவ் மஹராஜ், அடுத்த போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கேசவ் மகராஜ் அணியில் இருந்தாலும் இல்லையென்றாலும் தங்கள் அணிக்கு அவர் முக்கியமான வீரர் தான் என்றும், மைதானத்தின் தன்மை கொண்டு இந்த முடிவு எடுக்கப்படலாம் என்றும் தென் ஆப்ரிக்கா அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் தென் இரண்டாவது போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்க்ள் தேவை என்னும் பட்சத்தில், பேட்ஸ்மேன்களான மார்கம் மற்றும் எல்கரை கேப்டன் டூபிளசிஸ் பயன்படுத்தி கொள்வார் என்றும் தென் ஆப்ரிக்கா அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.