முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து விடுவதாக கூறினார். தற்போது நடந்து கொண்டிருக்கும் பிக் பாஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் பீட்டர்சன். அந்த அணிக்காக முக்கிய நேரங்களில் ரன் அடித்தும் தருகிறார். ஆனால் இந்த பிக் பாஷ் லீக் தொடர் வைத்து அவரது கிரிக்கெட் வாழ்க்கையை மதிப்பிட எனவும் கூறினார். தற்போது நடந்து வரும் பிக் பாஷ் லீக் தொடர் தான் அவருக்கு கடைசி தொடர் ஆகும்.
“ஒரு வீரராக இந்த பிக் பாஷ் லீக் தொடர் தான் எனக்கு கடைசி என முடிவு செய்துள்ளேன். இந்த வருட இறுதியில் பிக் பாஷ் லீக் தொடர் தொடங்கும் போது நான் சிறப்பாக செயல்படவேண்டும் என நினைக்கமாட்டேன். அப்படி என்றால் முடித்து கொள்ள இது தான் நேரம். மீதம் இருக்கும் போட்டிகளில் நான் விளையாடி கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவேன்,” என கூறினார்.
அனைவர்க்கும் ஒரு முடிவு இருக்கும் என எல்லாருக்கும் தெரியும் என்று நினைக்கிறன். அதே போல் தான் என் கிரிக்கெட் வாழ்க்கைக்கும் ஒரு முடிவு இருக்கிறது. எனக்கு இது வேண்டுமா? கண்டிப்பாக இந்த நேரத்தில் எனக்கு வேண்டும், ஆனால் இந்த 10 மாத இடைவெளியில் இது வேண்டும் என்று நான் நினைக்கவில்லை,” என பீட்டர்சன் கூறினார்.
அவர் கடைசியாக இங்கிலாந்து அணிக்காக 2014ஆம் ஆண்டு விளையாடினார். அதன் பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கும் இவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதால், இவரை அணியை விட்டு தூக்கினார்கள். 2004ஆம் ஆண்டு இவர் கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைக்கும் போது, இவர் பெரிய வீரராக வருவார் என்று அப்போதே அனைவரும் முடிவு செய்தார்கள்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், 37. இவர் கடந்த 2004ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக அறிமுகமானார்.
இதுவரை இங்கிலாந்து அணிக்காக 104 டெஸ்ட் (8181 ரன்கள்), 136 ஒருநாள் (4440 ரன்கள்), 37 டி-20 (1176 ரன்கள்) பங்கேற்றுள்ளார். இந்நிலையில் தென் ஆப்ரிக்காவில் பிறந்த இவர், இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகத்தின் விதிகளை மீறி, தென் ஆப்ரிக்க வீரர்களுடன் மெசேஜ் அனுப்பிய சர்ச்சைக்கு பின் இங்கிலாந்து அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டார்.