காயம் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த கைரன் பொல்லார்ட் விலகியுள்ளார்.
கடந்த மாதம் 22-ம் தேதி முதல்பாகிஸ்தானில் பிஎஸ்எல் டி20போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெஷாவர் ஜல்மி அணிக்காக கைரன் பொல்லார்ட் விளையாடி வந்தார்.
இந்நிலையில் கைரன் பொல்லார்டின் வலது கால் தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கார்லோஸ் பிராத்வெயிட், பெஷாவர் ஜல்மி அணிக்காக விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் விரைவில் தொடங்க உள்ளன. இப்போட்டிகளில், குவெட்டா கிளேடியேட்டர்ஸ் அணியில் விளையாடும் உமர் அக்மலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திலுள்ள ஊழல் கண்காணிப்பு ஆணையம் அண்மையில் விசாரணை நடத்தியது.
இதை சுட்டிக்காட்டி அந்த ஆணையத்தின் விசாரணை முடிவடையும் வரையில் அனைத்து வகையிலான கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு உமர் அக்மலுக்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அக்மல் இடைநீக்கம் செய்யப்பட்ட குற்றத்தின் தன்மையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிடவில்லை.
DUBAI, UNITED ARAB EMIRATES – SEPTEMBER 19: Umar Akmal of Pakistan in action during a net session at ICC Cricket Academy on September 19, 2016 in Dubai, United Arab Emirates. (Photo by Francois Nel/Getty Images)
சமீபத்தில் தான், லாகூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்பயிற்சி பரிசோதனையின் போது ஒரு பயிற்சியாளரிடம் மோதல் போக்கை கடைபிடித்து உமர் அக்மல் தடையில் இருந்து தப்பினார்.
பாகிஸ்தான் அணிக்காக 16 டெஸ்ட், 121 ஒருநாள் மற்றும் 84 டி20 போட்டிகளில் ஆடியுள்ள உமர் அக்மல், கடந்த சில தொடர்களில் பாகிஸ்தான் அணியில் ஆடவில்லை. ஒருநாள் அணியில் ஓராண்டாக ஆடவில்லை. டி20 அணியில் கடந்த ஆண்டு நடந்த இலங்கைக்கு எதிரான தொடரில் கடைசியாக ஆடினார்.