டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்துள்ளது 1

அணிகள்:

ராஜஸ்தான் ராயல்ஸ் (முதல்) : டி அர்சி ஷார்ட், ஜோஸ் பட்லர் (வி), அஜிங்கியா ரஹனே (சி), சஞ்சூ சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பின்னி, ஜோஃப்ரா ஆர்ச்சர், கிருஷ்ணப்பா கவுதம், ஷ்ரேயாஸ் கோபால், ஜெய்தேவ் யூனாட், ராகுல் திரிபாதி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : கிறிஸ் லின், சுனில் நாரைன், ராபின் உத்தப்பா, ஆண்ட்ரே ரஸல், தினேஷ் கார்த்திக், கேட்ச், நிதீஷ் ராணா, ஷுப்மான் கில், ஜாவோன் செர்ல்ஸ், பிரசித் கிருஷ்ணா, ஷிம்மா மாவி, குல்தீப் யாதவ்

ஐபிஎல் 11-வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மற்ற இரண்டு அணிகள் எது என்பதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

ஐந்து அணிகளும் தலா இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டியுள்ளது. இரண்டிலும் வெற்றி பெற்றால்தான் பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்ய முடியும். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவிதி அந்த அணியிடம்தான் உள்ளது என்று தலைமை பயிற்சியாளர் ஜேக்யூஸ் கல்லீஸ் தெரிவித்துள்ளார்.

டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்துள்ளது 2

இதுகுறித்து கல்லீஸ் கூறுகையில் ‘‘எங்களுடைய தலைவிதி இன்னும் எங்கள் கையில்தான் உள்ளது. நாங்கள் இன்னும் இரண்டு போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என்றால், எங்களால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும்.

நாங்கள் தற்போது இன்று நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில்தான் கவனம் செலுத்துகிறோம். இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். மற்ற அணிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பதை குறித்து நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *