நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே - நிதி அகர்வாலுடன் வந்த புகைப்டங்கள் கூறித்து ராகுல் கருத்து 1
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் கேஎல் ராகுல். பெங்களூரைச் சேர்ந்த இவர், ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அதிரடியாக விளையாடி அனைவருடைய கவனைத்தையும் ஈர்த்தார்.

பாலிவுட் நடிகை நித்தி அகர்வாலுடன் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் கொண்டுள்ள நட்பு குறித்து சமூகவலைத்தளங்கள் படங்களுடன் அலற, இது காதல்தான் என்று பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா? அது அவ்வளவு கடினமா? என்று அங்கலாய்த்துள்ளார்.நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே - நிதி அகர்வாலுடன் வந்த புகைப்டங்கள் கூறித்து ராகுல் கருத்து 2

தற்போது இவர் இந்தி நடிகை நிதி அகர்வாலை காதலிப்பதாக தகவல் வெளியானது. ஐதராபாத்தில் பிறந்து கர்நாடகாவில் வளர்ந்த நிதி அகர்வாலும் கேஎல் ராகுலும் நட்பாகப் பழகி வந்தனர் என்றும் பிறகு காதலில் விழுந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் அவர்கள் இருவரும் மும்பை விமான நிலையத்தில் ஒன்றாக சுற்றியபோது மீடியா கண்ணில் பட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் ராகுல் ரசிகர்கள் பக்கத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகின.
நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே - நிதி அகர்வாலுடன் வந்த புகைப்டங்கள் கூறித்து ராகுல் கருத்து 3
நிதி அகர்வால் முன்னா மைக்கேல், டாய்லெட் ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ளார். சவ்யா சாட்சி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இருவரும் காதலிப்பதாக வெளியான தகவல்களுக்கு கேஎல் ராகுல் விளக்கம் அளித்துள்ளார். ஒரு தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்த அவர், “ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாதா?. அது என்ன அவ்வளவு கஷ்டமா? என கேட்டுள்ளார்நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே - நிதி அகர்வாலுடன் வந்த புகைப்டங்கள் கூறித்து ராகுல் கருத்து 4

இது தொடர்பாக என்.டி.டிவியில் கே.எல்.ராகுல் கூறும்போது, “ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாதா? அது அவ்வளவு கடினமானதா? எனக்கு அவரை நீண்டகாலமாகத் தெரியும், நாங்கள் இருவரும் ஒரே நகரைச் சேர்ந்தவர்கள். மும்பையில் உள்ள உணவு விடுதியில் ராகுலும் நித்தியும் இருந்ததை பலரும் கண்டுள்ளனர்.

 நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே - நிதி அகர்வாலுடன் வந்த புகைப்டங்கள் கூறித்து ராகுல் கருத்து 5

அவரது துறையில் அவரது முன்னேற்றம் அபாரமானது. நான் கிரிக்கெட் வீரராகவும் அவர் பாலிவுட் நடிகையாகவும் இருக்கும் போதே இருவருக்கும் அறிமுகம் உண்டு. ஏதோ நானும் அவரும் மட்டும் தனியாக எங்கும் செல்லவில்லை. இன்னும் 3-4 பேர் பெங்களூருவைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். நண்பர்களுடன் செல்வது பிடித்தமானது, ஆனால் வேறு எதுவும் கிடையாது. அப்படி எனக்கு ஏதாவது உறவு முறை இருந்தால் அதனை நான் அனைவருக்கும் தெரியப்படுத்தி விட்டே பழகுவேன். இதில் என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை” என்றார்.நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே - நிதி அகர்வாலுடன் வந்த புகைப்டங்கள் கூறித்து ராகுல் கருத்து 6

ராகுலின் இந்த விளக்கத்தினால் அவரது காதல் குறித்து வெளியான வதந்திகளுக்கு ஒரு திர்வு கிடைத்துள்ளது. இந்த வதந்திக்கு நடிகை நிதி அகர்வாலும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *