உங்கள் அன்புக்கு நன்றி - குல்தீப் மாஸ் செய்துவிட்டார் : கே.எல் ராகுல் நன்றி ட்வீட் 1

நெற்று ஆடிய ஆட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார் கே.எல் ராகுல்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கலக்கல் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரை விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் டி20 போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் மெர்சலான பேட்டிங்கால் வெற்றி கிட்டியது.உங்கள் அன்புக்கு நன்றி - குல்தீப் மாஸ் செய்துவிட்டார் : கே.எல் ராகுல் நன்றி ட்வீட் 2

டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பௌலிங் செய்ய தீர்மானித்தார். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜாஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை கையாண்டனர். ராய் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். பட்லர் 46 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார்.

பெரிய ஸ்கோரை இங்கிலாந்து எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர்களைத் தவிர டேவிட் வில்லி மட்டும் தான் இரட்டை இலக்கு ரன்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அன்புக்கு நன்றி - குல்தீப் மாஸ் செய்துவிட்டார் : கே.எல் ராகுல் நன்றி ட்வீட் 3

பேர்ஸ்டோ, ரூட் மற்றும் கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் டக்-அவுட் ஆகினர். இப்படி பேட்டிங்கில் திடீர் சொதப்பலால் இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு வெறும் 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து சுலபமான இலக்கை கடக்கும் நோக்குடன் களமிறங்கியது வலுவான பேட்டிங் கொண்ட இந்திய அணி. தொடக்க வீரர்களில் ஒருவரான தவான், 4 ரன்களுக்கு அவுட்டாக, ரோகித் ஷர்மா 30 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து களமிறங்கிய ராகுல், 54 பந்துகளுக்கு 101 ரன்கள் எடுத்து கடைசி வரைக்கும் ஆட்டம் இழக்காமல் இருந்தார். விராட் கோலி 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் ராகுலுக்கு கம்பெனி கொடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்திய அணி, 18.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு கடந்தது.உங்கள் அன்புக்கு நன்றி - குல்தீப் மாஸ் செய்துவிட்டார் : கே.எல் ராகுல் நன்றி ட்வீட் 4

இந்நிலையில், போட்டியில் தனது 6 வது ரன்னை அடிக்கும் போது, டி20 ஆட்டங்களில் 2000 ரன்களை கடக்கும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் கேப்டன் விராட் கோலி. மேலும், சர்வதசே அளவில் இந்த சாதனையை புரியும் நான்காவது வீரராகவும் ஆனார் கோலி.

இதுவரை நியூசிலாந்து அணியின் மார்டின் கப்டில், பிரண்டன் மெக்கலம் மற்றும் பாகிஸ்தானின் சோயப் மாலிக் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை புரிந்திருந்தனர். இந்த மூவரும் எடுத்துக் கொண்ட ஆட்டங்களை விட கோலி மிகக் குறைவான (56) போட்டிகளிலேயே இந்த சாதனை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 ஆட்டத்தில் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளும், சதமும் அடித்த அணிகள்:

  • மார்னி வேன் விக் (114*), டேவிட் வீஸ் (5/23) – மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக டர்பனில் 2015-ல் எடுத்தனர்
  • கே.எல்.ராகுல் (101*), குல்தீப் யாதவ் (5/24) – இங்கிலாந்துக்கு எதிராக  மான்சஸ்டரில் 2018-ல் எடுத்தனர்

டி20 போட்டிகளில் சதமடித்த இந்திய வீரர்கள்:

  • 118 ரோஹித் ஷர்மா v இலங்கை, இந்தூர், 2017
  • 110* கே.எல்.ராகுல் v மே.இ.தீவுகள், லௌடர்ஹில், 2016
  • 106 ரோஹித் ஷர்மா v தென் ஆப்பிரிக்கா, தரம்சாலா, 2015
  • 101 சுரேஷ் ரெய்னா v தென் ஆப்பிரிக்கா, கிராஸ் இஸ்லெட், 2010
  • 101* கே.எல்.ராகுல் v இங்கிலாந்து, மான்சஸ்டர், 2018

ஒரே நாளில் நடைபெற்ற வெவ்வேறு டி20 ஆட்டங்களில் சதமடித்த வீரர்கள் (இதில் 2 முறையும் கே.எல்.ராகுல் இடம்பெற்றுள்ளார்):

  • 27 ஆகஸ்ட் 2016: இவன் லீவிஸ் (100) & கே.எல்.ராகுல் (110*)
  • 03 ஜூலை 2018: ஆரோன் பிஞ்ச் (172) & கே.எல்.ராகுல் (101*)

இந்திய கேப்டன் விராட் கோலி சர்வதேச டி20 அரங்கில் 1,000 ரன்களையும் (27 இன்னிங்ஸ்), 2,000 ரன்களையும் (56 இன்னிங்ஸ்) அதிவேகமாக கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *