கங்குலிக்கு நோட்டீஸ் அனுப்ப கொல்கத்தா மாநகராட்சி முடிவு

கொல்கத்தாவின் இளவரசனின் இந்த அரணமனையில் மொத்தம் 48 அறைகள் உள்ளன. 4 மாடிகள் கொண்ட இந்த அரண்மணையில் அனைத்தும் உள்ளது. ஒரே நேரத்தில் 200 பேர் இந்த அரண்மனையில் தங்க முடியும். பழங்கால மர வேலைப்படுகள் , கண்ணாடிகள் என அனைத்தும் இங்கு உள்ளது

 இந்த பிரம்மாண்ட வீட்டினால் தற்போது கங்குலிக்கு பிரச்சனை உருவாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க தலைவருமான கங்குலிக்கு கொல்கத்தா மாநகராட்சி நோட்டிஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது. கங்குலியின் மூத்த சகோதரரும் முன்னாள் ராஞ்சி வீரருமான ஸ்னேஹசிஸ் கங்குலி அண்மையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
As per the state health department, there have been 35 dengue deaths in West Bengal since January though the unofficial count is considered to be somewhere around 50
இதையடுத்து, அங்குள்ள நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், பேலாவில் உள்ள கங்குலியின் வீட்டில் சுகாதரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, கங்குலியின் வீட்டில் இருந்த கழிவு நீர் தேங்கும் இடங்களில் டெங்கு கொசுக்களின் லார்வாக்கள் இருப்பதாகவும் அதை அகற்ற வேண்டும் என்று தெரிவிவித்து விட்டு சென்றனர்.
இது குறித்து கொல்கத்தா மாநகராட்சி அதிகாரு ஒருவர் கூறியதாவது,
கங்குலியின் பெஹ்லா பங்களாவில் லார்வக்காள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 19ஆம் தேதி அங்கு ஆய்வு நடத்திய போது அங்கு லார்வாக்கள் இருப்பதுன் கண்டோம். மேலும், அவற்றை சுத்தம் செய்து தூய்மையாக வைத்திருக்கும்படி கூறிவிட்டு சென்றோம். இருந்தும் இரண்டவது முறை நாங்கள் அண்டு சென்று பார்த்தபோது அந்த குறிப்பிட்ட இடம் சுத்தம் செய்யப்படாமல் இருந்தது. இதன் காரணமாக தற்போது அதிகாகாரப்பூர்வமாக கங்குலிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
எனக் கூறினார்
Indian captain Sourav Ganguly celebrates after India defeated England in NatWest Series final at Lord’s. Image Courtesy: Getty Images
இதைத்தொடர்ந்து மீண்டும் நேற்று அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றபோது, கங்குலியின் வீட்டில்  டெங்கு கொசுக்களின் லார்வாக்கள் அவரது வீட்டு வளாக்த்தில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து விதிகளின் படி கங்குலிக்கு நோட்டீஸ் அனுப்ப மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகமாக உள்ளது. கடந்த ஜனவரியில் இருந்து அரசு அறிவிப்பின் படி 35 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர்.

Editor:

This website uses cookies.