நேற்றைய போட்டியின் போது விராட் கோலி என்னிடம் கூறியது இதுதான்: ஜடேஜா ஓப்பன் டாக் 1

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நான் நல்ல விளையாட்டு வீரர் என்பதை உலகிற்கு நிரூபிப்பதை விட எனக்கு நானே நிரூபிக்க வேண்டியுள்ளது என ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை 2019 போட்டிக்கான தொடரில் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா இடம்பெற்றிருந்தார். ஆனால் எல்லா போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ஆனால் முக்கிய போட்டியான அரையிறுதி போட்டியில் ஆடிய ஜடேஜா அவர் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். நட்சத்திர ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க ஜடேஜா 59 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். ஆனாலும் அப்போட்டியில் இந்திய அணி துரதிர்ஷ்டவசமாக தோல்வியை தழுவியது.

நேற்றைய போட்டியின் போது விராட் கோலி என்னிடம் கூறியது இதுதான்: ஜடேஜா ஓப்பன் டாக் 2
India’s Ravindra Jadeja (right) celebrates after New Zealand’s Ross Taylor is run out during the ICC World Cup, Semi Final at Old Trafford, Manchester. (Photo by David Davies/PA Images via Getty Images)

அதன் பின்னர் நடைபெற்ற சில தொடர்களில் ஜடேஜா விளையாடினார். இதற்கிடையே கட்டாக் நகரில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், ஜடேஜா ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நான் நல்ல விளையாட்டு வீரர் என்பதை உலகிற்கு நிரூபிப்பதை விட எனக்கு நானே நிரூபிக்க வேண்டியுள்ளது என ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

நேற்றைய போட்டியின் போது விராட் கோலி என்னிடம் கூறியது இதுதான்: ஜடேஜா ஓப்பன் டாக் 3
MANCHESTER, ENGLAND – JULY 10: Ravindra Jadeja of India reaches his half century during resumption of the Semi-Final match of the ICC Cricket World Cup 2019 between India and New Zealand after weather affected play at Old Trafford on July 10, 2019 in Manchester, England. (Photo by Michael Steele/Getty Images)

‘இந்த வருடம் இந்திய அணி விளையாடிய அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் நான் பங்கேற்கவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கிலும் எனது முழுத்திறமையை வெளிப்படுத்தினேன்.

நேற்றைய ஆட்டத்தில் ஷர்துல் தாகூரின் பேட்டிங் மிக முக்கியமானது ஆகும். இந்த தொடர்களில் நாங்கள் நிறைய கேட்சுகளை தவறவிட்டோம். அவ்வாறு நடந்திருக்கக்கூடாது. ஒருநாள் போட்டிகளில் நான் ஒரு நல்ல விளையாட்டு வீரர் என்பதை உலகிற்கு தெரியப்படுத்துவதை விட எனக்கு நானே நிரூபிக்க வேண்டும்’ என ஜடேஜா தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *