இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் படைக்கப்போகும் 3 இமாலய சாதனைகள்!! 1

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் கோலி, ரோகித் ஷர்மா, குல்தீப் யாதவ் புதிய சாதனை படைக்கவுள்ளனர்.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிப்பெரும் பட்சத்தில் இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றிவிடும். ஏனென்றால் இந்தத் தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்றது. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் படைக்கப்போகும் 3 இமாலய சாதனைகள்!! 2

இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இன்றைய போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்தால் இந்தியா சார்பில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைப்பார். இதுவரை 53 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ள குல்தீப் யாதவ் 96 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்தியா சார்பில் ஒருநாள் போட்டியில் அதிவேகமாக முகமது ஷமி 56 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரின் சாதனையை குல்தீப் யாதவ் முறியடிக்க வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் படைக்கப்போகும் 3 இமாலய சாதனைகள்!! 3

அத்துடன் இன்றைய போட்டியில் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து 27 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் மற்றொரு புதிய சாதனையை படைக்க உள்ளது, அதாவது இவர்கள் இருவரும் ஜோடியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 1000 ரன்களை கடப்பார்கள். இது ஒரு புதிய சாதனையாக அமையும்,

 

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, கலீல் அகமது, குல்தீப் யாதவ்.

வெஸ்ட் இண்டீஸ்: கிறிஸ் கெய்ல், இவின் லீவிஸ் அல்லது ஜான் கேம்ப்பெல், ஷாய் ஹோப், ஹெட்மயர், நிகோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), கார்லஸ் பிராத்வெய்ட், கெமார் ரோச், ஷெல்டன் காட்ரெல், ஒஷானே தாமஸ்.

இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி டென்1, சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இன்றைய ஆட்டம் முழுவதும் அவ்வப்போது மழை குறுக்கிடலாம் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *