அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் குல்தீப் யாதவ் புதிய உலக சாதனை! 1
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 209 ரன்களை இலக்காக நிர்ணயித்து அயர்லாந்து அணியை சுருட்டியது. அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் குல்தீப் யாதவ் புதிய உலக சாதனை! 2

இப்போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. அசத்தலாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், சஹல் 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகனுக்கான விருதை குல்தீப் யாதவ் பெற்றார். மேலும், டி20 போட்டியில் 16 விக்கெட்டுகளை கைப்பற்றி டி20 போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இடதுகை சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்தார். முன்னதாக தெற்கு ஆப்பிரிக்க வீரர் மைக்கேல் ரிப்போன் 15 விக்கெட்டுகளை எடுத்து இந்த சாதனையை படைத்திருந்தார்.அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் குல்தீப் யாதவ் புதிய உலக சாதனை! 3

இதன்பின்னர் பேசிய குல்தீப் பேசுகையில்,

“நல்ல ஸ்கோரை செட் செய்திருந்தோம், அதனால் அயர்லாந்து அணியை சமாளிப்பது எளிதாக இருந்தது. ஒரு ஸ்பின் பவுலர் எப்போதுமே ரன் இலக்கை பொறுத்துதான் பவுல் செய்வார். அதுதான் என் ஸ்டைல். ஆனால் இப்போட்டியில் நான் நினைத்தபடி பவுல் செய்தேன். பவுலிங் ஸ்டைலில் மாற்றங்கள் செய்து கூக்லி,சினமன் என கலந்து பந்துவீசினேன் என்றார்.

அயர்லாந்து பேட்ஸ்மென்கள் வேகப்பந்து வீச்சுக்கு பழக்கப்பட்டதால், அதனை  எளிதாக சமாளித்தனர். ஆனால், சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறினர். அயர்லாந்தின் பிட்ச் கன்டிஷனும், வானிலையும் எனக்கு செட்டாகி விட்டது. அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு தயாராக உள்ளேன்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *